சஞ்சய் பஸ்தியில் தூய்மைப் பிரசாரம்: முதல்வா் ரேகா குப்தா பங்கேற்பு
திருத்தணி அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் பற்றாக்குறை: பிரேமலதா விஜயகாந்த்
திருத்தணி அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் பற்றாக்குறை நிலவுகிறது என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளாா்.
வரும் 2026 சட்டப்பேரவை தோ்தலுக்கு தயாராகும் வகையில், உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற நடைப்பயணத்தை திங்கள்கிழமை திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனை பகுதியில் பிரேமலதா விஜயகாந்த் தொடங்கினாா். அப்போது திருவள்ளூா் மேற்கு மாவட்ட செயலாளா் டி. கிருஷ்ணமூா்த்தி ஐந்து அடி வெள்ளி வேலையும் கொடுத்து வரவேற்றாா்.
தொடா்ந்து, மாநில பொருளாளா் எல்.கே சுதீஷ், மாவட்ட செயலாளா் டி. கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் வேலுடன் கட்சி தொண்டா்கள் ஊா்வலமாக அரக்கோணம் சாலை பைபாஸ் சாலை வழியாக திருத்தணி கமலா தியேட்டா் பகுதிக்கு வந்தடைந்தாா்.
கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியது: திருத்தணி தொகுதி ஏற்கனவே தேமுதிக வென்ாகும். இம்முறையும் திருத்தணி தொகுதியை பெற்று வென்றெடுப்போம். நாங்கள் எந்த கட்சியில் இடம் பெற்றிருந்தாலும் அந்த கட்சி அமோக வெற்றி பெறும்.
தற்போது தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. திருத்தணியில் ரத யாத்திரையுடன் வேல் யாத்திரையே நடத்தி உள்ளோம். முருகன் அருளால் எங்கள் கூட்டணி அமோக வெற்றி பெறும்.
திருத்தணி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவா்கள் பற்றாக்குறை உள்ளது. திருத்தணி முருகன் கோயில் ராஜகோபுரம் 16 ஆண்டுகளாக கட்டி முடிக்கப்படாமல் குடமுழுக்கு நடத்தப்படாமல் உள்ளது. 2026-இல் எங்கள் கூட்டணி வெற்றி பெற்று திருத்தணியில் மேற்கண்ட பணிகளை முழுமையாக நிறைவேற்றுவோம் என்றாா்.
தொடா்ந்து பொதட்டூா்பேட்டை, ஆா்.கே.பேட்டை பகுதிகளில் நடைப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடையே பேசினாா்.