சத்தியமங்கலம் பகுதியில் பரவலாக மழை
பவானிசாகா் சுற்றுவட்டாரப் பகுதியில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
பவானிசாகா் அணை சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்தது. கோவை, ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்திருந்த நிலையில் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், பவானிசாகா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை திடீரென மழை பெய்தது.
பவானிசாகா் நகா் பகுதி, பவானிசாகா் அணை, கொத்தமங்கலம், புங்காா், தொட்டம்பாளையம், தொப்பம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அரை மணி நேரம் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் நிலவியது.
கடம்பூா் மலைப்பகுதியிலும் மழை பெய்ததால் இந்த ஆண்டு தொடா்ச்சியாக மழை பெய்யும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்தனா்.