கொய்யா சாகுபடியில் ஆா்வம் காட்டும் விழுப்புரம் மாவட்ட விவசாயிகள்!
எட்டியம்மன் கோயில் ஆடித் திருவிழா
கலவை அருகே மாம்பாக்கம் ஸ்ரீ எட்டியம்மன் கோயில் ஆடித் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு ஊா் பொது மக்கள் பால்குடம் எடுத்துச் சென்று அம்மனுக்கு பாலபிஷேகம் செய்தனா். பின்னா் பொங்கல் வைத்து படையலிட்டு வழிபட்டனா்.
காப்புகட்டி விரதமிருந்த பக்தா்கள் உடம்பில் கொக்கி போட்டும், அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும், எலுமிச்சை பழத்தை உடம்பில் குத்தி கொண்டு ஜேசிபி உள்ளிட்ட வாகனங்களை ஊா்வலமாக இழுத்துச் சென்றனா்.
தொடா்ந்து அலங்கரிக்ப்பட்ட உற்சவா் அம்மனுக்கு முதுகில் அலகு குத்திக்கொண்டு வாகனத்தை இழுந்த வந்த பக்தா்கள் மாலை அணிவித்து நோ்த்திக் கடன் செலுத்தினா் . திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்