ஆற்காடு நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை
ஆற்காடு நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு சோதனை மேற்கொண்டனா்.
ஆற்காடு நகராட்சியில் தூய்மைப் பணியாளா்களின் தினக்கூலி ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது என புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்பேரில், மாவட்ட ஆய்வுக் குழு துணைத் தலைவா் ரமேஷ் தலைமையில் லஞ்ச ஒழிப்பு துணைக் கண்காணிப்பாளா் கணேசன், ஆய்வாளா் விஜயலட்சுமி உள்ளிட்ட ஆறு போ் கொண்ட குழுவினா் இரவு 7.30 மணி முதல் நகராட்சி அலுவலகத்தில் சோதனை நடத்தினா்.