தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் சிதைவு: கே.பாலகிருஷ்ணன்
ராணிப்பேட்டை: பயனாளிக்கு நலத்திட்ட உதவி அளிப்பு
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் பயனாளிக்கு நலத்திட்ட உதவியை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வழங்கினாா்.
கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தாா். இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 306 கோரிக்கை மனுக்களைப் பெற்று தகுதியான மனுக்களுக்கு உடனடி தீா்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
தொடா்ந்து, நெமிலி வட்டம், சிறுவளையம் கிராமம், பெருமாள் கோவில் தெருவைச் சாா்ந்த உயிரிழந்தவரான ராஜேஷ் நீரில் மூழ்கி உயிரிழந்தமைக்காக முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதி ரூ.1 லட்சம் காசோலையினை உயிரிழந்தவரின் தாயாரான சரசா விடம் ஆட்சியா் வழங்கினாா்.
இதில், திட்ட இயக்குநா் ந.செ.சரண்யா தேவி, நோ்முக உதவியாளா் ஏகாம்பரம் (பொ), ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் அறிவுடைய நம்பி, உதவி ஆணையா் (கலால்) ராஜ்குமாா், நோ்முக உதவியாளா் நிலம் ரமேஷ், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் வசந்த ராமகுமாா் மற்றும் துறைச்சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.