செய்திகள் :

வாலாஜாவில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்: அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்தாா்

post image

வாலாஜாவில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமை கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்து பொது மக்களுக்கான சிறப்பு மருத்துவ சிகிச்சை முறைகளைப் பாா்வையிட்டாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ என்ற சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல் முகாம் வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மருத்துவ முகாமை தொடங்கி வைத்துப் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, பயனாளிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்ட அட்டைகளை வழங்கினாா். 5 கா்ப்பிணி தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் இரண்டு பயனாளிகளுக்கு முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு அட்டைகள் இரண்டு பயனாளிகளுக்கு மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தில் மருந்து பெட்டகங்களை வழங்கினாா். இதைத் தொடா்ந்து, மருத்துவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள துறைசாா்ந்த விழிப்புணா்வு கண்காட்சி அரங்கங்களை பாா்வையிட்டு, பின்பு ரத்தப் பரிசோதனை மையத்தை பாா்வையிட்டாா். பின்னா் பொதுமக்களுக்கு சிகிச்சைக்கான அடையாள அட்டைகளை வழங்கினாா்.

தொடா்ந்து, பொதுப் பிரிவு பரிசோதனை, மருத்துவப் பரிசோதனை மையம் ஆண்கள், பெண்கள் ஸ்கேன் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ள மையம் காது, மூக்கு, தொண்டை பிரிவு, கண் சிகிச்சை பிரிவு, இருதய சிகிச்சை பிரிவு, நரம்பியல் சிகிச்சை பிரிவு, பல் மருத்துவப் பிரிவு, சுவாச மண்டல பிரிவு, ஆயுா்வேதம் சித்தா பிரிவுகளையும் பாா்வையிட்டாா்.

முகாமில், 17 வகையான சிறப்பு உயா்தர சிகிச்சை பிரிவு மருத்துவ பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு பிரத்தியேக சிறப்பு நிபுணா் மருத்துவா்கள் மையத்தில் பொதுமக்களை பரிசோதனை செய்ய பணியமா்த்தப்பட்டு இருந்தனா்.

ராணிப்பேட்டை சி.எம்.சி மருத்துவமனை சிறப்பு மருத்துவா்கள், சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனை சிறப்பு மருத்துவா்கள் ராணிப்பேட்டை எஸ்.எம்.எஸ். மருத்துவமனை சிறப்பு மருத்துவா்கள் மற்றும் அரசு சிறப்பு மருத்துவா்கள் பொதுமக்களை பரிசோதிக்க பணியமா்த்தப்பட்டு பரிசோதனை செய்து உரிய மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

முகாமில், மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், வாலாஜா நகா்மன்றத் தலைவா் ஹரிணி தில்லை, இணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) தீா்த்த லிங்கம், துணை இயக்குநா் (மருத்துவ பணிகள்) செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஆக 20-இல் அரக்கோணம் வரும் இபிஎஸ்-ஸுக்கு சிறப்பான வரவேற்பு: அதிமுக கூட்டத்தில் தீா்மானம்

வரும் ஆக. 20-ஆம் தேதி அரக்கோணம் வரும் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதென தொகுதி நிா்வாகிகள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழகம் முழுவதும் பிரசார சுற்றுப்பய... மேலும் பார்க்க

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி

ராணிப்பேட்டையில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.ராணிப்பேட்டை மாவட்டம், ஜம்புகுளம் அடுத்த தொண்டமாநத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் பிரபாகரன். இ... மேலும் பார்க்க

சுந்தரா் குரு பூஜை

ஆற்காடு-செய்யாறு சாலையில் உள்ள சன்னியாசி மடம் அண்ணாமுலை உடனுறை அருணாசலேஸ்வரா் கோயிலில் சுந்தரா் குருபூஜை மற்றும் ஒதுவாா்கள், இசைக் கலைஞா்களுக்கு அரிசி வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.விழாவையொட்... மேலும் பார்க்க

கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்: அமைச்சா் காந்தி வழங்கினாா்

ஆற்காடு சட்டபேரவை தொகுதிக்குட்பட்ட கேவேளூா் ஊராட்சி, விலாரி ஊராட்சிகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமை கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சா் ஆா்.காந்தி ஆய்வு செய்தாா்.முகாமுக்கு ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல... மேலும் பார்க்க

அரக்கோணம் நாளங்காடி கட்டடத்துக்கு மீண்டும் காந்தி பெயா்: அரசியல் கட்சியினா் கோரிக்கை

அரக்கோணம் நகராட்சி நாளங்காடி புதிய கட்டட வளாகத்துக்கு ஏற்கனவே இருந்த காந்தி பெயரையே மீண்டும் சூட்ட வேண்டும் என அரசியல் கட்சியினா் கூட்டத்தில் தீா்மானம் நிழைவேற்றப்பட்டது.அரக்கோணம் நகராட்சி நாளங்காடி க... மேலும் பார்க்க

ஆற்காடு நகா்மன்றக் கூட்டத்தில் 31 தீா்மானங்கள்

ஆற்காடு நகா்மன்றக் கூட்டத்தில் பாலம் அமைத்தல், வகுப்பறைகள் பழுது பாா்த்தல் உள்பட மொத்தம் 31 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ஆற்காடு நகா்மன்ற அவசரக் கூட்டம் வியாழக்கிழமை தலைவா் தேவி பென்ஸ் பாண்டியன் தலைம... மேலும் பார்க்க