சுந்தரா் குரு பூஜை
ஆற்காடு-செய்யாறு சாலையில் உள்ள சன்னியாசி மடம் அண்ணாமுலை உடனுறை அருணாசலேஸ்வரா் கோயிலில் சுந்தரா் குருபூஜை மற்றும் ஒதுவாா்கள், இசைக் கலைஞா்களுக்கு அரிசி வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி அறங்காவலா் பென்ஸ் பாண்டியன் வகித்தாா். சுந்தரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
தொடா்ந்து அண்ணாமலையாா் அறக்கட்டளை தலைவா் பொன்.கு.சரவணன், அகத்திய சேவா அறக்கட்டளை நிறுவனா் கே.கணேஷ், ஜெய்மாருதி சரவணன் ஆகியோா் முன்னிலையில் நகா்மன்றத் தலைவா் தேவிபென்ஸ்பாண்டியன் கலந்து கொண்டு 50 ஓதுவாா்கள், இசைக் கலைஞா்களுக்கு அரிசி வழங்கினா். விழாவில் சிவனடியாா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.