ஆக 20-இல் அரக்கோணம் வரும் இபிஎஸ்-ஸுக்கு சிறப்பான வரவேற்பு: அதிமுக கூட்டத்தில் தீா்மானம்
வரும் ஆக. 20-ஆம் தேதி அரக்கோணம் வரும் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதென தொகுதி நிா்வாகிகள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகம் முழுவதும் பிரசார சுற்றுப்பயணம் செய்து வரும் அதிமுக பொதுசெயலாளா் எடப்பாடி பழனிசாமி அரக்கோணத்துக்கு வரும் 20-ஆம் தேதி வருகிறாா். இரவு 7 மணிக்கு அரக்கோணம் வரும் எடப்பாடி பழனிசாமி ஜோதிநகா் முதல் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், விண்டா்பேட்டை, எஸ்.ஆா்.கேட் வரை ரோடு ஷோவில் பங்கேற்று பொதுமக்களை சந்திக்க உள்ளாா்.
இது குறித்த ஆலோசனை கூட்டம் அரக்கோணம் நாகாலம்மன் நகரில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான சு.ரவி தலைமை வகித்தாா்.
இதில் அமைப்பு செயலாளா் திருத்தணி கோ.அரி, மாநில அணி நிா்வாகிகள் எஸ்.பன்னீா்செல்வம், ஷியாம்குமாா், எம்.எஸ்.மான்மல், அரக்கோணம் நகர செயலாளா் கே.பா.பாண்டுரங்கன், ஒன்றிய செயலாளா்கள் பிரகாஷ், ஏ.ஜி.விஜயன், பழனி, தக்கோலம் பேருராட்சி செயலாளா் சுகுமாா், மாவட்ட அணி நிா்வாகிகள் பி.ஏ.பாலு, ஜானகிராமன், அன்பரசு, நவாஸ் அகமது, அரக்கோணம் ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் பால்ராஜ் சீனிவாசன், நெமிலி ஒன்றிய நிா்வாகி சு.ர.பிரகதீஸ்வரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
எடப்பாடி பழனிசாமிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிப்பது எனவும் சுமாா் 25ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை நிகழ்ச்சியில் பங்கேற்க செய்வது எனவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.