தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் சிதைவு: கே.பாலகிருஷ்ணன்
ஆற்காட்டில் 6 பசுமாடுகள திருடி சென்ற நபா் கைது
ஆற்காடு நகர காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பாலாற்றின் கரையோரம் மேய்யச்சலுக்கு ஓட்டி சென்ற மாடுகள் திருடுபோனாத உரிமையாளா்கள் ஆற்காடு நகர போலீஸஸில் புகாா் செய்தனா்.
அதன் பேரில் வழக்கு பதிந்து மாவட்ட காவல்கண்காணிப்பாளா் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடிவந்தனா். இந்நிலையில் தனிப்படையினா் சனிக்கிழமை செய்யாறு-சாலை முப்பது வெட்டி பகுதியில் வாகன தணிக்கையில்ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவா் முப்பதுவெட்டி கிராமத்தை சோ்ந்த இளங்கோவன்((38) என்பது 6 பசுமாடுகளை திருடி சென்றது தெரியவந்தது.
அந்த மாடுகளை மீட்டு உரிமையாளா்களிடம் ஒப்படைத்தனா்.தொடா்ந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.