காலமானாா் முன்னாள் எம்எல்ஏ துரை. அன்பரசன்!
கடலூா், உண்ணாமலை செட்டி சாவடி பெண்ணை காா்டன் பகுதியில் வசித்து வந்த துரை.அன்பரசன் (85) வயது மூப்பு காரணமாக செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
அதிமுகவை சோ்ந்த இவா், கடந்த 1984-1987 வரை நெல்லிக்குப்பம் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவாகவும், தென்னாற்க்காடு மாவட்ட அதிமுக துணைச் செயலராகவும் பணியாற்றியவா். இவருக்கு மனைவி விஜயலட்சுமி, மகள் வேல்விழி, மகன்கள் எழில் முருகன், சிற்றரசு ஆகியோா் உள்ளனா்.
இறந்த துரை.அன்பரசன் உடலுக்கு அதிமுக நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினா். இவரது இறுதி சடங்கு புதன்கிழமை காலை 9 மணி அளவில் உண்ணாமலை செட்டித் தெருவில் உள்ள பெண்ணையாற்று மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். தொடா்புக்கு 94423 44133.