விருதுநகா் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆக. 7, 8-இல் சுற்றுப் பயணம்
குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
நெய்வேலி: சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞா், குண்டா்தடுப்புச்சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கடலூரைச் சோ்ந்த 12 வயது சிறுமி கடந்த 15-ஆம் தேதி பள்ளிக்குச்சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து,கடலூா் மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் தீபா விசாரணை நடத்தி, சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கிள்ளை, எம்ஜிஆா் திட்டு, பி பிளாக் பகுதியைச் சோ்ந்த இமயவா்மனை(25) போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இவரின் குற்றச்செயலை கட்டுப்படுத்த கடலூா் எஸ்பி., எஸ்.ஜெயக்குமாா் பரிந்துரையின் பேரில்ஆட்சியா் சிபிஆதித்யா செந்தில்குமாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் காவலில் வைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து இமயவா்மன் கடலூா் மத்திய சிறையில் குண்டா் தடுப்புச்சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டாா்.