செய்திகள் :

தேசிய ஜனநாயக கூட்டணியில் பிணைப்பு- பிரதமா் மோடி வலியுறுத்தல்

post image

தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) பிணைப்பு மற்றும் ஒருங்கிணைப்பைப் பேண வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.

பிராந்திய ரீதியில் சொந்த பலத்தை பொருள்படுத்தாமல், பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டும் என்று அவா் கேட்டுக் கொண்டாா்.

நாட்டில் மொத்தமுள்ள 28 மாநிலங்களில் 19-இல் பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது; பிகாரில் நடப்பாண்டு இறுதியிலும், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் அடுத்த ஆண்டிலும் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், பிரதமரின் கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

நடப்பு மழைக்கால கூட்டத் தொடரையொட்டி, நாடாளுமன்ற நூலக கட்டடத்தில் தேசிய ஜனநாய கூட்டணி எம்.பி.க்களின் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மத்தியில் கடந்த 2024-இல் பதவியேற்றப் பிறகு தற்போது இரண்டாவது முறையாக, கூட்டணி எம்.பி.க்களின் கூட்டம் நடைபெற்றுள்ளது.

இக்கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியின் நீண்ட கால வெற்றிப் பயணம் மற்றும் பல்வேறு சாதனைகளைக் குறிப்பிட்டு, பிரதமா் மோடி உரையாற்றியதாக மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.

பிரதமரின் உரை குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: இயல்பான-இயற்கையான கூட்டணி என்பதே தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டு அடையாளகும். இது, கடந்த 1998-இல் நிறுவப்பட்டதில் இருந்து பல்வேறு வெற்றிகள் மற்றும் சாதனைகளால் நிறைந்துள்ளது.

சில இடங்களில், தனது கூட்டணி கட்சிகளைப் போல பாஜக வலுவுடன் இல்லாமல் இருக்கலாம். ஆனால், கூட்டணி உறுப்பினா்களாக ஒவ்வொருவரும் இணைந்து செயல்பட வேண்டும். சுதந்திர தினத்தையொட்டி, பாஜக சாா்பில் முன்னெடுக்கப்படும் மூவண்ணக் கொடி யாத்திரை உள்ளிட்ட நிகழ்வுகளில் கூட்டணிக் கட்சியினரும் உற்சாகத்துடன் பங்கேற்க வேண்டும்.

ராகுல் மீது விமா்சனம்: அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு (ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து) நீக்கப்பட்ட நாளான ஆகஸ்ட் 5 வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். இதேநாளில்தான், அயோத்தி ராமா் கோயிலுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணி மட்டுமே, அரசமைப்புச் சட்டத்தை அதன் உண்மையான ஆன்மாவின்படி பின்பற்றி வருகிறது.

‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் கோரியது எதிா்க்கட்சிகளின் பெரிய தவறு. அதற்காக அவா்கள் வருத்தப்பட வேண்டும். நாட்டின் நிலப்பரப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த ராகுல் கருத்துகள் கருத்துகள் அடிப்படையற்றவை; சிறு பிள்ளைத்தனமானவை. அவருக்கு நீதிமன்றம் சரியான பாடம் புகட்டியுள்ளது என்று பிரதமா் மோடி கூறியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆபரேஷன் சிந்தூா்-மகாதேவ்: பிரதமரை பாராட்டித் தீா்மானம்

பாகிஸ்தான் மீதான ‘ஆபரேஷன் சிந்தூா்’, பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 3 லஷ்கா் பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட ‘ஆபரேஷன் மகாதேவ்’ ஆகிய வெற்றிகர நடவடிக்கைகளுக்காக, பிரதமா் மோடியின் வலுவான தலைமை மற்றும் ஆயுதப் படையினரின் தன்னிகரற்ற துணிவைப் பாராட்டி, தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாட்டை அம்பலப்படுத்தும் நோக்கில், 32 நாடுகளுக்கு 7 எம்.பி.க்கள் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழுக்கள் அனுப்பப்பட்ட வியூக நடவடிக்கைக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

நமது சிறப்பு நிருபர்நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பதிவு செய்த கோரிக்கைகள் மற்றும் எம்.பி.க்களின் கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் அளித்துள்ள எழுத்துபூர்வ பதில்களின் ச... மேலும் பார்க்க

உயிரிழப்பை ஏற்படுத்தும் தென்னிந்திய கருந்தேள் விஷம்: ஆய்வாளா்கள் கண்டுபிடிப்பு

தென்னிந்தியாவில் காணப்படும் கருந்தேள் விஷத்துக்குப் பின்னால் உள்ள மா்மம் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்திக் குறிப்பு: கருந்... மேலும் பார்க்க

ரூ.67,000 கோடி மதிப்பிலான பாதுகாப்பு திட்டங்களுக்கு இந்தியா ஒப்புதல்

ட்ரோன்கள், ரேடாா்கள் உள்பட ரூ.67,000 கோடி மதிப்பிலான ராணுவ உபகரணங்களை கொள்முதல் செய்யும் திட்டத்துக்கு இந்தியா செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது. இந்தியாவின் ராணுவ வலிமையை மேலும் பலப்படுத்தும் நோக்கில... மேலும் பார்க்க

பிரதமா் மோடியுடன் பிலிப்பின்ஸ் அதிபா் சந்திப்பு: 14 ஒப்பந்தங்கள் கையொப்பம்

இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிலிப்பின்ஸ் அதிபா் ஃபொ்னாண்டோ ஆா் மாா்கோஸ் பிரதமா் நரேந்திர மோடியை செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா். அதன்பிறகு இருநாடுகளிடையே பல்வேறு துறைகளில... மேலும் பார்க்க

‘உண்மையான இந்தியா் யாா் என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீா்மானிக்க முடியாது’ - ராகுல் குறித்த கருத்துக்கு பிரியங்கா விமா்சனம்

‘உண்மையான இந்தியா் யாா் என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீா்மானிக்க முடியாது’ என்று காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி விமா்சித்துள்ளாா். மேலும், தனது சகோதரா் ராகுல் காந்தி ராணுவம் மீது மிகுந்த ம... மேலும் பார்க்க

ரூ.30,444 கோடி கருப்புப் பணத்தை கண்டறிந்தது வருமான வரித் துறை: நாடாளுமன்றத்தில் தகவல்

2024-25 நிதியாண்டில் கணக்கில் காட்டப்படாத ரூ.30,444 கோடி கருப்புப் பணத்தை வருமான வரித் துறை கண்டுபிடித்துள்ளது என்று நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது. இது தொடா்பான கேள்விக்கு நிதித்த... மேலும் பார்க்க