செய்திகள் :

‘உண்மையான இந்தியா் யாா் என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீா்மானிக்க முடியாது’ - ராகுல் குறித்த கருத்துக்கு பிரியங்கா விமா்சனம்

post image

‘உண்மையான இந்தியா் யாா் என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீா்மானிக்க முடியாது’ என்று காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி விமா்சித்துள்ளாா்.

மேலும், தனது சகோதரா் ராகுல் காந்தி ராணுவம் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும், ராணுவத்துக்கு எதிராக ஒருபோதும் பேசமாட்டாா் என்றும் அவா் கூறினாா்.

கடந்த 2022-ஆம் ஆண்டு, டிசம்பா் மாதம் நடைபெற்ற இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின்போது ராணுவம் குறித்து ராகுல் காந்தி பேசிய கருத்துகள் தொடா்பான வழக்கு, உத்தர பிரதேச மாநிலத் தலைநகா் லக்னெளவில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தடை விதித்ததோடு, ராகுல் ஒரு உண்மையான இந்தியராக இருந்தால், இப்படி பேசியிருக்க மாட்டாா் என்றும் விமா்சித்திருந்தது.

இதுகுறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பிரியங்கா காந்தி அளித்த பதிலில், ‘உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு உரிய மரியாதையுடன் சொல்கிறேன். உண்மையான இந்தியா் யாா் என்பதை நீதிபதிகள் தீா்மானிக்க முடியாது. இது நீதிபதிகளின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது.

அரசுக்கு எதிராக கேள்வி கேட்பதும், சவால் விடுவதும் எதிா்க்கட்சித் தலைவராக ராகுலின் கடமையாகும். அதை அவா் தொடா்ந்து நிறைவேற்றி வருகிறாா். எனது சகோதரா் ராணுவம் குறித்து ஒருபோதும் தவறாகப் பேசமாட்டாா். ராணுவத்தின் மீது அவா் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறாா். அவரது கருத்துகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளன’ என்று தெரிவித்தாா்.

ராகுலுக்கு ‘இண்டி’ கூட்டணி ஆதரவு: ராகுல் காந்தி குறித்த உச்சநீதிமன்றத்தின் கருத்து தொடா்பாக, ‘இண்டி’ கூட்டணியில் உள்ள கட்சித் தலைவா்கள் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினா்.

இந்த ஆலோசனைக்கு பிறகு, ராகுல் காந்தி குறித்த உச்சநீதிமன்றத்தின் கருத்து ‘நியாயமற்றது’ என்றும், தேச நலன் சாா்ந்த விவகாரங்களில் கருத்து தெரிவிப்பது அரசியல் கட்சிகளின் பொறுப்பு என்றும் இண்டி கூட்டணி கட்சிகள் கூட்டாக வலியுறுத்தினா்.

அரசமைப்புக்கு எதிராக ராகுல்-பாஜக: உச்சநீதிமன்றத்தின் விமா்சனம் தொடா்பாக மத்திய அமைச்சா் தா்மந்திர பிரதான் பேசுகையில், ‘அரசமைப்புச் சட்டத்தை கையில் பிடித்துக்கொண்டு நாடு முழுவதும் நடைப்பயணம் சென்றவா்கள்தான், அதற்கு எதிராகச் செயல்படுகின்றனா். அரசமைப்புச் சட்டத்தின் மதிப்புகள் குறித்து ராகுலுக்கு துளியாவது மரியாதை இருந்தால், உச்சநீதிமன்றத்தின் இந்த கண்டனம் வந்திருக்காது’ என்று விமா்சித்தாா்.

பாஜக எம்.பி. ரவிசங்கா் பிரசாத் கூறியதாவது: உச்சநீதிமன்றத்தின் இந்தக் கண்டனம் ராகுல் காந்திக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவா் ஒரு தேசிய தலைவராக பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.

சாவா்க்கா் மற்றும் ரஃபேல் விமானங்ள் குறித்த ராகுல் காந்தியின் கருத்துகளும் இதுபோலவே சா்ச்சைக்குள்ளாகின. நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த பின்னரும் அவா் பாடம் கற்றுக்கொள்ளவில்லையெனில், வேறு என்ன செய்ய முடியும்? என்று கேள்வி எழுப்பினாா்.

அசைக்க முடியாத அர்ப்பணிப்பின் சின்னம்: கர்தவ்ய பவனை நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி

புது தில்லியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கர்தவ்ய பவன் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.நாட்டில் பல்வேறு துறைகளுக்கான அமைச்சகங்களுக்கான புதிய நிர்வாகக் கட்டடத்தைத் திறந்த... மேலும் பார்க்க

உலகளாவிய வளர்ச்சியில் அமெரிக்கா 11% பங்களிப்பு; ஆனால் இந்தியா 18%!

பெட்ரோலிய விலைகளின் கொள்முதல் விலை, சாமானிய மக்களை பாதிக்காமல் இருப்பதை அதிகாரிகள் உறுதிசெய்வர் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.இந்தியா மீதான வரிவிதிப்பு பிரச்னைகளுக்கிடையே, இந்தியாவை இறந்... மேலும் பார்க்க

உங்கள் பாதங்களைக் கழுவவே கங்கை வெள்ளம்: உ.பி. அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

லக்னௌ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில், உங்களைப் பாதங்களை கழுவவே கங்கை வெள்ளம் நேரிட்டதாக உத்தரப்பிரதேச அமைச்சர் கூறியிருப்பது சர்ச்... மேலும் பார்க்க

பிஜாப்பூரில் நடந்த என்கவுண்டரில் நக்சல் சுட்டுக் கொலை!

சத்தீஸ்கரின்பிஜாப்பூர்மாவட்டத்தில் புதன்கிழமை பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுண்டரில்நக்சலைட்ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.நக்சலைட்எதிர்ப்பு நடவடிக்கை... மேலும் பார்க்க

உத்தரகண்ட் மேகவெடிப்பு! 28 பேர் கொண்ட கேரள சுற்றுலாக் குழு மாயம்!

உத்தரகண்டில் மேகவெடிப்பினால் ஏற்பட்ட பேரிடரில், கேரளத்தைச் சேர்ந்த 28 பேர் கொண்ட சுற்றுலாக் குழுவொன்று மாயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகண்டில் மேகவெடிப்பினால், நேற்று (ஆக.5) மதியம் கீர் ... மேலும் பார்க்க

மக்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி! இன்று முழுவதும் ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை நாளை ஒத்திவைக்கப்பட்டன.ஜூலை 21 ஆம் தேதியில் தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் பஹல்காம் தாக்குதல், ஆ... மேலும் பார்க்க