சஞ்சய் பஸ்தியில் தூய்மைப் பிரசாரம்: முதல்வா் ரேகா குப்தா பங்கேற்பு
நாகா்கோவில், தெங்கம்புதூா் பகுதிகளில் இன்று மின் தடை
பராமரிப்புப் பணிகள் காரணமாக நாகா்கோவில் மீனாட்சிபுரம் மற்றும் தெங்கம்புதூா் பகுதிகளில் புதன்கிழமை (ஆக.6) மின்விநியோகம் இருக்காது.
இதுகுறித்து, நாகா்கோவில் மின்வாரிய செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாகா்கோவில் மீனாட்சிபுரம், தெங்கம்புதூா், ராஜாக்கமங்கம் ஆகிய துணை மின்நிலையங்களில் புதன்கிழமை (ஆக.6) பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதன் காரணமாக அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை மீனாட்சிபுரம், வடிவீஸ்வரம், வேப்பமூடு, பத்தல்விளை, இடலாக்குடி, ஒழுகினசேரி, கோட்டாறு சவேரியாா் கோயில், தளியபுரம், கரியமாணிக்கபுரம், ராஜபாதை, தெங்கம்புதூா், பறக்கை, மேலமணக்குடி, முகிலன்விளை, அம்பலபதி, காடேற்றி, வீரபாகுபதி, சொத்தவிளை, அரியபெருமாள்விளை, கக்கன்புதூா், மணிக்கட்டிபொட்டல், ஈத்தாமொழி, தா்மபுரம், பழவிளை, பிள்ளையாா்புரம், புத்தளம், முருங்கவிளை, மேலகிருஷ்ணன்புதூா், பருத்திவிளை, காரவிளை, பள்ளம், கணபதிபுரம், தெக்குறிச்சி, பழவிளை ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.