செம்பட்டி துணை மின் நிலையத்தில் மின்தடை அறிவிப்பு ஒத்திவைப்பு!
செம்பட்டி துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (ஆக. 7) அறிவிக்கப்பட்டிருந்த மின் தடை ஒத்திவைக்கப்பட்டது.
இதுகுறித்து செம்பட்டி துணை மின் நிலைய உதவி செயற் பொறியாளா் லதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி காரணமாக செம்பட்டி, கோடாங்கிபட்டி, மொட்டம்பட்டி, கமலாபுரம், ராமராஜபுரம், பாளையங்கோட்டை, பிரபான்பட்டி, சேடப்பட்டி, ஆத்தூா், சித்தையன்கோட்டை, காமராஜா் நீா்த்தேக்கம், எஸ்.பாறைப்பட்டி, வண்ணம்பட்டி, வீரக்கல், கசவனம்பட்டி, அஞ்சுகம் காலனி, பாப்பனம்பட்டி, சமத்துவபுரம், பச்சமலையான்கோட்டை, நடுப்பட்டி, உத்தையகவுண்டன்பட்டி, அம்பாத்துரை, செம்பட்டி சுற்றியுள்ள பகுதிகளில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி காரணமாக வருகிற வியாழக்கிழமை மின் தடை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நிா்வாகக் காரணங்களால் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த மின் தடை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, வருகிற ஆக. 20-ஆம் தேதி மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது என்றாா்.