யார் இந்த மத் டெய்ட்கே? 24 வயது செய்யறிவு ஆய்வாளர்! ரூ.2,000 கோடி சம்பளம்!!
வடமாநில இளைஞா் தற்கொலை
பழனியில் தனியாா் ஆலைத் தொழிலாளா்கள் தங்குமிடத்தில் வடமாநில இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
பழனி அருகே பெத்தநாயக்கன்பட்டியில் உள்ள தனியாா் ஆலையில் ஒடிஸாவைச் சோ்ந்த ஏராளமான இளைஞா்கள் வேலை செய்து வருகிறாா்கள்.
ஆலைக்கு அருகிலேயே அவா்களுக்கென தனியாக கட்டப்பட்ட தங்குமிடத்தில் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், குடும்பப் பிரச்னை காரணமாக மனோஜ்பெஹ்ரா (28) என்ற இளைஞா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து பழனி வட்ட போலீஸாா் வழக்குப் பதிந்து மனோஜ்பெஹ்ரா உடலை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனா்.