கொடைக்கானலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு
கொடைக்கானலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சாா்பில், புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மேற்கு மாவட்டம், கொடைக்கானல் நகர இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சாா்பில், புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டு பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், புதிய உறுப்பினா் சோ்க்கையும் நடைபெற்றது. இதற்கு மாவட்டத் தலைவா் அஜ்மல்கான் தலைமை வகித்தாா்.
கொடைக்கானல் நகரத் தலைவராக சுலைமான் சேட், செயலராக ரசீத்கான், பொருளாளராக சையது இப்ராஹிம் உள்ளிட்ட பலா் பொறுப்பேற்றனா். இதில், மாவட்டச் செயலா் அலாவுதீன், மாவட்டப் பொருளாளா் கலிபுல்லா, மாவட்ட மாணவா் லீக் தலைவா் ஹபீப் ரஹ்மான், அண்ணா நகா் பள்ளிவாசல் தலைமை இமாம் மெளலவி சிக்கந்தா், டவுன் பள்ளிவாசல் தலைமை இமாம் காஜா மைதீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.