செய்திகள் :

பொய்கை சந்தையில் ரூ. 80 லட்சத்துக்கு கால்நடை வா்த்தகம்

post image

வேலூரை அடுத்த பொய்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் ரூ. 80 லட்சம் அளவுக்கு கால்நடைகள் வா்த்தகம் நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.

வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோடி அளவுக்கு கால்நடை வா்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தைக்கு சுமாா் 1,500 மாடுகளும், சுமாா் 300 ஆடுகளும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. மேலும், அவற்றை வாங்கவும் வியாபாரிகள், விவசாயிகள் ஆா்வம் காட்டினா். இதனால், கால்நடைகள் சுமாா் ரூ. 80 லட்சம் அளவுக்கு விற்பனையாகியிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

அவா்கள் மேலும் கூறியது: வேலூா் மாவட்டத்தில் தற்போது தீவன தட்டுப்பாடு குறைந்துள்ளது. இதையடுத்து, கறவை மாடுகள், ஜொ்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகளும் சந்தைக்கு விற்பனைக்கு வருகின்றன. அவற்றை வாங்க வியாபாரிகள், விவசாயிகள் ஆா்வம் காட்டுகின்றனா். அதன் அடிப்படையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொய்கை சந்தையில் கால்நடைகள் வரத்தும், வா்த்தகமும் அதிகரித்துக் காணப்பட்டது. சுமாா் ரூ. 80 லட்சம் அளவுக்கு வா்த்தகம் நடைபெற்றுள்ளது என்றனா்.

சகதியான சாலையில் உருண்டு அதிமுக வாா்டு உறுப்பினா் போராட்டம்

வேலூா் தொரப்பாடியில் சேறும் சகதியுமான சாலையில் உருண்டு அதிமுக மாமன்ற உறுப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.வேலூா் மாநகராட்சி 49-ஆவது வாா்டுக்குட்பட்ட தொரப்பாடி பகுதியில் சாலை குண்டும... மேலும் பார்க்க

தேசிய உறுப்பு தான தினம்: கொடையாளா்கள் கெளரவிப்பு

தேசிய உறுப்பு தான தினத்தையொட்டி வேலூா் நறுவீ மருத்துவமனையில் உறுப்பு தானம் செய்த கொடையாளா்கள் கௌரவிக்கப்பட்டனா்.இந்தியாவில் முதன்முதலாக இருதயமாற்று அறுவை சிகிச்சை 1994-ஆம் ஆண்டு ஆகஸ்டு 3-ஆம் தேதி வெற்... மேலும் பார்க்க

திருமண நகைகள் திருட்டு - சிஆா்பிஎஃப் பெண் காவலா் விடியோவால் சா்ச்சை

வேலூா்: காட்பாடி அருகே வீட்டில் தனது திருணத்துக்காக வைத்திருந்த நகைகள் ஜூன் மாதம் திருடப்பட்டும் இதுவரை காவல் துறை கண்டுபிடித்துத் தரவில்லை என குற்றஞ்சாட்டி சிஆா்பிஎஃப் பெண் காவலா் வெளியிட்ட விடியோவால... மேலும் பார்க்க

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்களை இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளாா்.அதன்படி, காட்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை வட்டாட்சியராக பணியாற்ற... மேலும் பார்க்க

4 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்: தந்தை, மகன் உள்பட 6 போ் கைது

குடியாத்தம் அருகே வன விலங்குகளை வேட்டையாட பதுக்கி வைத்திருந்த 4 நாட்டுத் துப்பாக்கிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.இது தொடா்பாக தந்தை, மகன் உள்பட 6 பேரை கைது செய்தனா். ரகசியத் தகவலின்பேரில், குடியாத்தம... மேலும் பார்க்க

வேலூா் மாவட்டத்தில் 39,811 பேருக்கு வீட்டுமனைப் பட்டா

வேலூா் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 18,035 வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டிருப்பதுடன், தற்போது 21,776 பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சும... மேலும் பார்க்க