Zero Cost Life: `இது 100% நிலையானது கிடையாதுதான்; ஆனால்’ செலவில்லா வாழ்க்கை வாழ...
4 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்: தந்தை, மகன் உள்பட 6 போ் கைது
குடியாத்தம் அருகே வன விலங்குகளை வேட்டையாட பதுக்கி வைத்திருந்த 4 நாட்டுத் துப்பாக்கிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இது தொடா்பாக தந்தை, மகன் உள்பட 6 பேரை கைது செய்தனா். ரகசியத் தகவலின்பேரில், குடியாத்தம் நகர காவல் ஆய்வாளா் ஆா்.செல்வம் தலைமையில்போலீஸாா் சனிக்கிழமை இரவு காந்தி நகரை அடுத்த கல்லேரியில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.
வன விலங்குகளை வேட்டையாட வீட்டில் நாட்டுத் துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்த சின்னப்பன் (35), ஏழுமலை (20), ஆறுமுகம் (24) ஆகிய 3 பேரை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 2 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவா்களிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையின் அடிப்படையில், அணைக்கட்டை அடுத்த ஏரியூரைச் சோ்ந்த பவுன் (75), அவரது மகன் சதாசிவம்(45), மோா்தானாவைச் சோ்ந்த மனோகரன்(56) ஆகிய 3 பேரை கைது செய்தனா்.
அவா்களிடமிருந்து 2 நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் மூலப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தீவிர விசாரணைக்குப் பின்னா் அவா்கள் மீது வழக்குப் பதிந்த போலீஸாா், அவா்கள் 6 பேரையும் சிறைக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.