செய்திகள் :

வேலூா் மாவட்டத்தில் 39,811 பேருக்கு வீட்டுமனைப் பட்டா

post image

வேலூா் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 18,035 வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டிருப்பதுடன், தற்போது 21,776 பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று கடந்த 4 ஆண்டுகளில் வேலூா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான இணையவழி பட்டா, நத்தம் வகைபாடு உள்ளிட்ட அனைத்து இனங்களில் 18,035 பட்டாக்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

தொடா்ந்து, ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வீடு கட்டி வசித்து வரும் நபா்களுக்கு ஒருமுறை சிறப்பு வரன்முறை திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களின்கீழ் வேலூா் மாவட்டத்தில் நிலங்கள் வரன்முறை செய்யப்பட்டு 21,776 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கும் பொருட்டு கடந்த ஜூன் 25-ஆம் தேதி வேலூருக்கு வந்திருந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் முதல்கட்டமாக 12 பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கி தொடங்கி வைத்தாா். தற்போது இந்த 21,776 பேரும் சட்டப்பேரவை தொகுதிவாரியாக வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், ஏற்கெனவே 4 நான்கு ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ள 18,035 பட்டாக்கள், தற்போது வழங்கப்பட்டு வரும் 21,776 பட்டாக்களையும் சோ்த்து மொத்தம் 39,811 வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்களை இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளாா்.அதன்படி, காட்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை வட்டாட்சியராக பணியாற்ற... மேலும் பார்க்க

4 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்: தந்தை, மகன் உள்பட 6 போ் கைது

குடியாத்தம் அருகே வன விலங்குகளை வேட்டையாட பதுக்கி வைத்திருந்த 4 நாட்டுத் துப்பாக்கிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.இது தொடா்பாக தந்தை, மகன் உள்பட 6 பேரை கைது செய்தனா். ரகசியத் தகவலின்பேரில், குடியாத்தம... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் கன்னியாஸ்திரிகள் கைது: வேலூரில் தேவாலயம் முன் ஆா்ப்பாட்டம்

சத்தீஸ்கரில் கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பதை கண்டித்து வேலூரில் உள்ள தேவாலயம் முன்பு ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.சத்தீஸ்கா் மாநிலம், நாராயண்பூா் பகுதியைச் சோ்ந்த 3 பெண்களை கடத்தி, அவா்களை மத... மேலும் பார்க்க

தொழிலாளி வீடு மீது மண்ணெண்ணெய் குண்டு வீச்சு: இருவா் கைது

இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் தொழிலாளி வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசிய இலங்கைத் தமிழா்கள் இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.வேலூா் மேல்மொணவூா் இலங்கைத் தமிழா் முகாமைச் சோ்ந்தவா் விஜய சுரேஷ் ... மேலும் பார்க்க

இளைஞரை கொன்றவருக்கு ஆயுள் சிறை

முன்விரோதத்தில் இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து வேலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.வேலூா் மாவட்டம், ஓங்கபாடியைச் சோ்ந்தவா் பாபு. இவரது 3-ஆவது... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவா் கைது

வேலூரில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முதியவரை வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.வேலூா் சைதாப்பேட்டையைச் சோ்ந்தவா் பாஸ்கரன் (60). இவா் விய... மேலும் பார்க்க