`தமிழகத்தில் தங்கம் விலை நிலவரத்தைப்போல கொலை நிலவரம்...' - இபிஎஸ் பேச்சு!
அசாமில் 3.65 லட்சம் இணைப்புடன் தொடரும் ஜியோ சேவை!
குவஹாட்டி: ரிலையன்ஸ், ஜியோவின் பிராட்பேண்ட் சேவையானது அசாமில் இதுவரைக்கும் 3,65,920 க்கும் மேற்பட்ட இணைப்புகளை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தற்போது வேகமாக வளர்ந்து வரக்கூடிய பிராட்பேண்ட் சேவையாக ஜியோவின் ஜியோ பைபர் அல்லது ஏர்ஃபைபர் உள்ளது.
5ஜி-இயங்கும் நிலையான வயர்லெஸ் சேவையான ஜியோ ஏர்ஃபைபர் ஜூன் மாதத்தில் மட்டும் 7,709 புதிய பயனர்களை இணைத்துள்ளது. இதன் மூலம் அசாமில் அதன் மொத்த பயனர் தளத்தை 1,33,279 ஆக உயர்த்தியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் வயர்டு பிராட்பேண்ட் சேவையான ஜியோ ஃபைபர், மே மாதத்தில் 2,27,198 சந்தாதாரர்களிலிருந்து ஜூன் மாதத்தில் 2,32,741 ஆக அதிகரித்து 5,543 புதிய இணைப்புகளைப் பதிவு செய்துள்ளது.
ஜியோ ஃபைபர், தனது வலுவான மற்றும் ஃபைபர்-ஆப்டிக் நெட்வொர்க் மூலம் முக்கிய சந்தைகளில் தனது இருப்பை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.
இதையும் படிக்க: பிரெஸ்டீஜ் எஸ்டேட்ஸ் லாபம் ரூ.292.5 கோடியாக உயர்வு!
Reliance Jio broadband services have reached over 3,65,920 homes in Assam and expanding to semi-urban clusters, the company said on Tuesday.