`தமிழகத்தில் தங்கம் விலை நிலவரத்தைப்போல கொலை நிலவரம்...' - இபிஎஸ் பேச்சு!
Road Sociology: தரமற்ற சாலைகள் மக்களின் வாழ்வையும் மனநிலையையும் பாதிக்கிறதா? - ஆய்வு சொல்வதென்ன?
அண்மையில் கேரளாவில் உள்ள திருச்சூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 300 தனிப்பட்ட நபர்களிடமிருந்து சாலை சூழல் அமைப்பு எவ்வாறு மனிதர்களின் உடல் நலன், சமூக இயக்கம், உளவியல் அமைப்பு ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்கிற ஆய்வு நடத்தப்பட்டது.

கேரள காவல்துறை உதவி ஆய்வாளர் மற்றும் கேரளா காவல் அகாடமியில் ஆராய்ச்சியாளராக இருக்கும் வினோத் குமார், இந்த ஆய்வை மேற்கொண்டிருக்கிறார். இவர் 'தி சவுத் ஃபர்ஸ்ட்' செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ''ஒரு சமூகம் சாலையில்தான் இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எர்ணாகுளத்தில் உள்ள எடப்பள்ளி சந்திப்பில் நீண்ட நேரம் காத்திருந்தபோது பல தரப்பட்ட மக்கள் சாலை நெரிசலில் வரிசை கட்டி நின்றனர். அதில் தொழிலதிபர், புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவர், சாலையோர வியாபாரிகளும் அடங்குவர்.
சாலை சமூகவியல் என்பது சாதாரணமானது அல்ல. இந்த ஆய்வின்போது உயர் ரத்த அழுத்தம், உடல்ரீதியான பாதிப்பு இருந்ததை உணர முடிந்தது. சுங்கச்சாவடி மற்றும் சாலை போக்குவரத்து நெரிசலுக்கு முன்பும் பின்பும் இந்த அளவு மாறுபடும் என்பதை நன்றாகவே காண முடிகிறது. முக்கியமான பணி சார்ந்த வேலைகள், திருமண நிகழ்ச்சிகள், விமான போக்குவரத்து நேரங்களில் சாலை கட்டமைப்பு பெரிதும் இடர் மற்றும் தடை ஏற்படுத்தும் இடமாக இருக்கிறது. இதனால் ஏற்படும் நேர மேலாண்மை சீர்குலைவு மன அழுத்தத்திற்கு காரணமாக அமைந்து விடுகிறது.

சாலையோரத்தில் செருப்பு தைப்பவர், லாட்டரி விற்போர், இளநீர் விற்போர், கூடவே குறைந்த அளவிலான போக்குவரத்து கட்டமைப்பு ஆகியவை பல்வேறு தரப்பட்ட மனிதர்களின் பயணத்தை தாமதப்படுத்தும் காரணிகளாக இருக்கின்றன. இது சாமானிய மனிதர்களை மட்டுமல்லாமல் பொருளாதாரத்தில் மேன்மை அடைந்தோரையும் சரியான நேரத்தில் குறிப்பிட்ட இலக்கை அடைய தாமதப்படுத்துவதாக இருக்கிறது. இதனால், பலருக்கு கிடைக்க வேண்டிய வேலை கை நழுவிய நிலை ஏற்பட்டதும் உண்டு.
அதுமட்டுமல்லாமல், தற்போது அடுத்தக்கட்ட சாலை சமூகவியல் பணியை மேற்கொள்ள இருக்கிறேன். இதில் வாகனம், காப்பீடு மற்றும் சமூக, பொருளாதார மற்றும் உளவியல் அம்சங்கள் கணக்கில் அடங்கும். இந்த ஆய்வு முடிவு கேரளாவுக்கானது மட்டுமல்ல, இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள சாலைகளுக்கும் இது பொருந்தும்.
இந்திய நகர்ப்புறங்களில் அதிகாலையில் வேலையை ஆரம்பிக்கும் சிறு வணிகர்கள், உணவக பணியாளர்கள் முதல் தொழிலதிபர்கள், செல்வாக்கு மிக்க மனிதர்கள் வரை வெறும் இயக்கத்திற்காக மட்டும் சாலையை பயன்படுத்தவில்லை... அது அவர்களின் வாழ்வாதாரத்திற்காகவும்தான். சில நகரங்களில் உள்ளாட்சி அமைப்புகள் சிறு, குறு வணிகர்களுக்காகவே சில குறிப்பிட்டப் பகுதியை ஒதுக்கியுள்ளது. இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால், சாலை நெரிசல் குறையும். பணிச்சூழல் மற்றும் வாழ்க்கை நிலையும் மேம்படும்.

இந்திய சாலைகள் என்பது வெறும் போக்குவரத்துக்கானது மட்டுமல்ல. அது பலருக்கு வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் கடத்தும் இடம். நல்லதொரு போக்குவரத்து அமைப்பு, போக்குவரத்து நெரிசலை சீர்படுத்தும் வழிமுறைகள் இவை அனைத்தும் உள்ளடக்கிய திட்டங்கள் அவசர தேவையாக உள்ளது'' என்கிறார் அவர்.
நல்லதோர் ஆய்வு..!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...