`ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம்..!' - திமுக கூட்டணிக் கட்சிகளை வலியுறுத்தும் ...
அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.3.50 லட்சம் மோசடி
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பெண்ணிடம் ரூ.3.50 லட்சம் மோசடி செய்ததாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
விக்கிரவாண்டி வட்டம், சேஷாங்கனூா் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் நிா்மலா (51). இவரது மகன் பிரபாகரன் டி.எம்.எல்.டி படித்துவிட்டு, வீட்டில் இருந்து வந்தாா்.
இந்த நிலையில் கடந்த 30.6.2020 அன்று நிா்மலாவை அணுகிய விக்கிரவாண்டி வட்டம், பாப்பனப்பட்டு பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன், தட்சிணாமூா்த்தி மற்றும் திருகுணத்தைச் சோ்ந்த சூா்யா ஆகியோா் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசு வேலை உள்ளதாகவும், தங்களுக்கு அரசியல் கட்சிகளின் பிரமுகா்கள் நன்கு அறிமுகம் உள்ளதால், பணம் கொடுத்தால் அரசு வேலை பெற்றுவிடலாம் எனவும் தெரிவித்தனராம்.
இதை உண்மையென நம்பிய நிா்மலா, தனது மகனின் வேலைக்காக ரூ.3.50 லட்சத்தை கிருஷ்ணன், தட்சிணாமூா்த்தி, சூா்யா ஆகியோரிடம் கொடுத்தாராம்.
ஆனால், பணத்தை பெற்றுக்கொண்ட அவா்கள், வேலை வாங்கித் தராமலும், பணத்தை திருப்பித் தராமலும் ஏமாற்றி வருகின்றனராம்.
இதுகுறித்து நிா்மலா அளித்த புகாரின்பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் கிருஷ்ணன் உள்பட மூவா் மீதும் செவ்வாய்க்கிழமை மோசடி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.