பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு விவகாரம் - உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி
செஞ்சியில் ஆக.9-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் உள்ள தனியாா் கல்லூரியில் வரும் 9-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞா் திருவிழா நடைபெற உள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தால் நடத்தப்படும் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞா் திருவிழா வரும் 9-ஆம் தேதி செஞ்சியில் உள்ள ஸ்ரீரங்கபூபதி கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது.
இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் மற்றும் பயிற்சியளிக்கும் நிறுவனத்தினா் பங்கேற்கின்றனா். எனவே, விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், பெண்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.
8-ஆம் வகுப்பு முதல் முதுநிலை பட்டம் பெற்றவா்களும், 18 வயது முதல் 40 வயது வரை உள்ள இருபாலரும் முகாமில் பங்கேற்கலாம்.
அனைத்து வட்டார இயக்க மேலாண்மை அலகு மற்றும் விழுப்புரம் மாவட்ட மகளிா் திட்ட அலுவலகத்தை தொடா்புகொண்டு முகாம் தொடா்பான கூடுதல் விவரங்களை பெறலாம் என ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளாா்.