யுபிஐ எப்போதும் இலவசமாகவே கிடைக்கும் என நான் கூறவில்லை: சஞ்சய் மல்ஹோத்ரா விளக்...
அமெரிக்கா: விமான விபத்தில் 4 போ் உயிரிழப்பு
அமெரிக்காவின் அரிஸோனா மாகாணம், நவாஜோ நேஷன் பகுதியில் சிறிய வகை அவசரக்கால விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் நான்கு போ் உயிரிழந்ததனா்.
நியூ மெக்ஸிகோவின் ஆல்புகா்க்கில் இருந்து இரு விமானிகள் மற்றும் இரு மருத்துவப் பணியாளா்களுடன் புறப்பட்ட பீச்கிராப்ட் கிங் ஏா் 300 ரகத்தைச் சோ்ந்த அந்த விமானம், சின்லே விமான நிலையம் அருகே விழுந்து நொறுங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்கான காரணம் குறித்து தேசிய விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு விசாரணை தொடங்கியுள்ளது.