செய்திகள் :

விபத்தில் 6 ஆண்டுகள் படுக்கை; `குழந்தையைப் போல கவனித்த மனைவிக்கு விவாகரத்து பரிசா?'

post image

மலேசியாவைச் சேர்ந்தப் பெண் நூரூல் சியாஸ்வானி. இவருக்கு 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு இவருக்கு ஒரு குழந்தை பிறந்தது. வாழ்க்கை அற்புதமாகச் சென்றுக்கொண்டிருந்தபோது, வாழ்க்கையின் பெரும் இடிவந்து இறங்கியது நூரூல் சியாஸ்வானிக்கு. 2019-ம் ஆண்டு அவரின் கணவர் கார் விபத்தில் கடும் காயமடைந்து படுக்கையில் வீழ்ந்தார். ஆனாலும், கணவன் மீது வைத்திருந்த அன்பால் கணவரை குழந்தையைப்போல பார்த்துக்கொண்டார். குழாய் மூலம் உணவளித்ததில் தொடங்கி, டையப்பர் மாற்றுவது வரை எல்லா சேவைகளையும் செய்துவந்தார்.

விபத்து
விபத்து

இதை தன் சமூக ஊடகங்களில் எழுதியிருந்தார் நூரூல் சியாஸ்வானி. இந்த நிலையில், கடந்த ஆண்டு நூரூல் சியாஸ்வானியின் கணவர் குணமடைந்தார். சாதாரண வாழ்க்கையை வாழத் தொடங்கிய சில வாரங்களில் நூரூல் சியாஸ்வானியை விவாகரத்துச் செய்வதாகத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து நூரூல் சியாஸ்வானியும் அவரின் விருப்பத்துக்கு சம்மதம் தெரிவித்து விவாகரத்தை ஏற்றுக்கொண்டார். இந்த விவாகரத்து நடந்த சில வாரங்களில் அவர் வேறொருப்பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

இதில் ஆச்சர்யமான விஷயம், நூரூல் சியாஸ்வானி தன் சமூக ஊடகப் பக்கத்தில் தன் முன்னாள் கணவரின் புதிய திருமணப் புகைப்படத்தை பதிவிட்டு, திருமண வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

அதில், ``என் ‘கணவருக்கு’ வாழ்த்துகள். நீங்கள் தேர்ந்தெடுத்தவருடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். தயவுசெய்து என்னைப் போலவே அவரை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். நான் அவருடன் வாழ்ந்து முடித்துவிட்டேன்; இப்போது அவருக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டிய நேரம் இது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

 நூரூல் சியாஸ்வானி
நூரூல் சியாஸ்வானி

இந்தப் பதிவுக்கு சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் வந்தது. அதில் ஒருபுறம் கணவரை ஏமாற்றுக்காரர், நன்றிகெட்டவர் என்ற விமர்சனமும், இன்னொருபுறம், இப்படி கேவலமாக நடந்துக்கொண்டவரை இன்னொருப் பெண்ணும் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என வாழ்த்துவதும், அதைப் பொறுமை என நம்பி தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்வதும் புத்திசாலித்தனம் அல்ல' என்றும் விமர்சனங்கள் வந்துக்கொண்டிருக்கிறது.

`விபத்துக்கான சிகிச்சையில், குழந்தையைப் போல கவனித்த மனைவிக்கு விவாகரத்து பரிசா?' - என்று நெட்டிசன்கள் வேதனையோடு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

அயர்லாந்து: ``இந்தியாவுக்கு திரும்பிப் போ'' - சிறுமியை தாக்கிய சிறுவர் கும்பல்; என்ன நடந்தது?

அயர்லாந்தில் கடந்த 8 ஆண்டுகளாக செவிலியர் பணி செய்து வரும் பெண் தன் 2 குழந்தைகள், கணவருடன் அங்கு வசித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்புதான் அயர்லாந்தின் குடிமக்களாக குடியுரிமை பெற்றிருக்கின்றனர். இ... மேலும் பார்க்க

Rajinikanth: மகளுடன் விமானத்தில் பயணித்த ரஜினிகாந்த்; உற்சாகத்தில் ஆர்ப்பரித்த ரசிகர்கள்

கூலி படத்தின் வெளியீடு நெருங்கி வருகிறது. நடைபெற்று வரும் புரொமோஷன் பணிகளே ஊரெங்கும் ரஜினிகாந்த் ஃபீவரைப் பரப்பி வருகின்றன. இதற்கிடையில் ஒரு கேஷுவலான விமான பயணத்தில் வைரலாகியிருக்கிறார் சூப்பர் ஸ்டார்... மேலும் பார்க்க

மும்பை: `புறாக்களுக்கு தீனி போட தடை' - தடுப்பை அகற்றி போராட்டத்தில் குதித்த ஜெயின் மக்கள்

மும்பையில் புறாக்களுக்கு தீனி போட மும்பை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இப்பிரச்னை இப்போது போராட்டமாக மாறியுள்ளது. மும்பையில் முக்கிய... மேலும் பார்க்க

AK : நடிகர் அஜித்துடன் இணையும் ரேஸர் நரேன் கார்த்திகேயன்! - நம்ம நரேனை நினைவிருக்கிறதா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித் குமார். குட் பேட் அக்லி படம் வெளியானதற்குப் பிறகு முழுவதும் கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். அஜித் குமார் ரேஸிங் நிறுவனத்தை தொடங்கி, அதைப்... மேலும் பார்க்க

பொதுமக்களுக்கு தடை: புறாக்களுக்கு தீனி போடும் மும்பை மாநகராட்சி; மக்கள் என்ன சொல்கிறார்கள்?

மும்பை முழுவதும் புறாக்களுக்கு தீனி போடுவதற்கு பிரத்யேக இடங்கள் இருக்கிறது. இந்த இடங்களில் பொதுமக்கள் மற்றும் குஜராத் வியாபாரிகள் புறாக்களுக்கு தானியங்களை உணவாக கொடுத்து வந்தனர். இதற்காக புறாக்கள் கூட... மேலும் பார்க்க

லண்டன் தெருக்களில் 'பான் மசாலா' கறைகள்; பரவும் வீடியோ - இந்தியர்கள் மீது அதிருப்தி!

லண்டன் தெருக்களில் குப்பைத் தொட்டிகள், தூண்கள் மற்றும் மரங்கள் இருக்கும் பகுதிகளெல்லாம் கருஞ்சிவப்பு வண்ணம் பூசியதுபோல பான் மசாலா எச்சில் கறைகளோடு தோற்றமளிக்கும் வீடியோ இணையத்தில் விவாதத்தைக் கிளப்பிய... மேலும் பார்க்க