அன்புமணி நடத்தும் பொதுக்குழுவுக்கு தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்
நாடாளுமன்றத்தில் பதவிப்பிரமாணம் எடுத்துள்ளேன்: தேர்தல் ஆணையத்துக்கு ராகுல் பதில்
நாடாளுமன்றத்தில் பதவிப்பிரமாணம் எடுத்துள்ளதாக தேர்தல் ஆணையத்துக்கு ராகுல் காந்தி பதிலளித்துள்ளார்.
மக்களவைத் தோ்தலில் நடந்ததாக கூறப்படும் வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் பெங்கரூவில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெங்களூரு, சுதந்திரப் பூங்காவில் வெள்ளிக்கிழமை (ஆக.8) ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனர். அப்போது பேசிய ராகுல் காந்தி, மக்களவைத் தேர்தலை மக்களிடமிருந்து திருட பாஜகவுடன் இணைந்து தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது.
தரவுகளை உறுதிமொழி பிரமாணமாக அளிக்குமாறு தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது. நான் அரசியல் அமைப்புச் சட்டப்படி நாடாளுமன்றத்தில் பதவிப்பிரமாணம் எடுத்துள்ளேன். நான் வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்தை மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கியதும், தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தை முடக்கியுள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில், எங்கள் கூட்டணி வெற்றி பெற்றது. இருப்பினும், நான்கு மாதங்களுக்குப் பிறகு, மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது.
இது ஒரு ஆச்சரியமான முடிவாகும். விசாரித்ததில், மக்களவைத் தேர்தலில் பங்கேற்காத 1 கோடி புதிய வாக்காளர்கள் மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் வாக்களித்தனர் என்பதைக் கண்டுபிடித்தோம். இந்தப் புதிய வாக்காளர்கள் எங்கெல்லாம் வாக்களித்தார்களோ அங்கெல்லாம் பாஜக வெற்றி பெற்றது. பேரவைத் தேர்தல்களில் பாஜகவின் வெற்றியை அதிகரித்தவர்கள் இந்தப் புதிய வாக்காளர்கள்தான். இவ்வாறு அவர் கூறினார். பேரணியைத் தொடர்ந்து, மாநில தலைமைத் தேர்தல் அதிகாரியை சந்தித்து ராகுல் காந்தி மனு அளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
வருமான வரி மசோதா: மக்களவையிலிருந்து திரும்பப் பெற்றார் நிர்மலா சீதாராமன்
ஆனால் அதை தவிர்த்துவிட்டு அவர் தில்லி புறப்பட்டு சென்றுவிட்டார். முன்னதாக கர்நாடக மாநிலம் மகாதேவபுரா தொகுதியில் சுமார் 1 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருந்ததாக ராகுல் குற்றம் சாட்டிய நிலையில், கர்நாடக மாநில வாக்காளர் பட்டியலில் முறைகேடாக சேர்க்கப்பட்ட மற்றும் விலக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை கையெழுத்திட்ட உறுதிமொழிப் பத்திரத்துடன் இணைத்து பகிருமாறு கர்நாடக தலைமைத் தேர்தல் அதிகாரி ராகுலிடம் கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.