செய்திகள் :

2024-ல் குடியுரிமையைத் துறந்த 2 லட்சம் இந்தியர்கள்: மத்திய அரசு!

post image

2024 ஆம் ஆண்டில், சுமார் 2 லட்சம் இந்தியர்கள் தங்களது இந்தியக் குடியுரிமையைத் துறந்துள்ளதாக, மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில், குடியுரிமையைத் துறந்து வெளிநாடுகளில் குடியேறிய இந்தியர்களின் எண்ணிக்கைகள் குறித்து, காங்கிரஸ் எம்.பி. கே.சி. வேணுகோபால் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த, மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் கிர்த்தி வர்தன் சிங், கடந்த 2024-ம் ஆண்டில் மட்டும் சுமார் 2 லட்சம் இந்தியர்கள் தங்களது குடியுரிமையைத் துறந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

“அமைச்சகம் வழங்கியுள்ள தரவுகளின்படி, இந்தியக் குடியுரிமையைத் துறந்த இந்தியர்களின் எண்ணிக்கை, கடந்த 2020 ஆம் ஆண்டில் 85,256; 2021-ல் 1,63,370; 2022-ல் 2,25,620; 2023-ல் 2,16,219 மற்றும் 2024-ல் 2,06,378” எனத் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் குடியேறிய இந்தியர்கள் தங்களது குடியுரிமையைத் துறந்ததற்கான காரணம் அவர்களுக்கு மட்டுமே தெரியும் என மத்திய அரசு கூறியுள்ளது.

இதையும் படிக்க: காலிஸ்தான் குடியரசு? கனடாவில் திறக்கப்பட்ட தூதரகத்தால் பரபரப்பு!

The central government informed the Lok Sabha that around 2 lakh Indians renounced their Indian citizenship in 2024.

ஜார்க்கண்டில் மின்னல் பாய்ந்து ஏழு பேர் பலி

ஜார்க்கண்டின் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்குதலுக்கு 7 பேர் பலியாகினர். ஜார்க்கண்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை நேற்று பெய்தது. அப்போது மின்னல் பாய்ந்து 7 பேர் பலியாகினர். பலமுவில் 4 பேர், குந... மேலும் பார்க்க

ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.PM Modi dials Putin, discusses Ukraine war, invites him to India மேலும் பார்க்க

ராகுல் vs தேர்தல் ஆணையம்! வாக்குத் திருட்டு விவகாரத்தில் அடுக்கடுக்கான கேள்விகள்!

மகாராஷ்டிரம் உள்ளிட்ட பேரவைத் தேர்தல்களில் வாக்குத் திருட்டு குறித்து இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் ராகுல் காந்தி 5 கேள்விகளை எழுப்பியுள்ளார்.மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் முறைகேடு ந... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் பதவிப்பிரமாணம் எடுத்துள்ளேன்: தேர்தல் ஆணையத்துக்கு ராகுல் பதில்

நாடாளுமன்றத்தில் பதவிப்பிரமாணம் எடுத்துள்ளதாக தேர்தல் ஆணையத்துக்கு ராகுல் காந்தி பதிலளித்துள்ளார். மக்களவைத் தோ்தலில் நடந்ததாக கூறப்படும் வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்ப... மேலும் பார்க்க

வருமான வரி மசோதா: மக்களவையிலிருந்து திரும்பப் பெற்றார் நிர்மலா சீதாராமன்

புது தில்லி: புதிய வருமான வரி மசோதா 2025-ஐ மக்களவையிலிருந்து திரும்பப் பெற்றிருக்கும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் தாக்கல் செய்யப்படும் என தெரிவித்துள்... மேலும் பார்க்க

தமிழ்நாடு உள்பட 11 மாநிலங்களில் 224 ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பாதிப்புகள்: மத்திய அரசு!

இந்தியாவின் 11 மாநிலங்களில், 2025 ஆம் ஆண்டு துவங்கியது முதல், 224 ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டதாக, மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகள... மேலும் பார்க்க