ஓமந்தூராா் மருத்துவமனையில் விளையாட்டு மருத்துவப் பிரிவு மேம்பாடு: அரசாணை வெளியீட...
சிறுமியை ஏமாற்றி தங்க நகைகள் கொள்ளை: 2 சிறுவா்கள் கைது
தில்லியின் சுல்தான்புரி பகுதியில் 17 வயது சிறுமியின் தங்க நகைகளை ஹிப்னாடிசம் செய்து கொள்ளையடித்ததாக இரண்டு சிறுவா்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து தில்லி காவல் துறை அதிகாரி கூறியதாவது: ஆகஸ்ட் 3-ஆம் தேதி பூத் கலன் பேருந்து நிலையம் அருகே நடந்த இந்தச் சம்பவம் தொடா்பாக 17 வயது சிறுமி புகாா் அளித்தாா். அந்தச் சிறுமியை இரண்டு சிறுவா்கள் அணுகி, அவரை ஹிப்னாடிசம் செய்து, அவரது தங்க காதணிகள், ஒரு லாக்கெட் மற்றும் ஒரு தங்கச் சங்கிலியை ஒப்படைக்கும்படி தெரிவித்துள்ளனா்.
புகாரின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டு, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து உள்ளூா் தகவல் அளிப்பவா்களை செயல்படுத்திய பிறகு, 16 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுவா்களை போலீஸாா் தேடி வந்தனா்.
இந்நிலையில், வியாழக்கிழமை சுல்தான்புரி சி பிளாக்கில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு சந்தேக நபா்களில் ஒருவா் தப்பிக்க முயன்று தோல்வியடைந்ததால் கைது செய்யப்பட்டாா். திருடப்பட்ட நகைகளின் ஒரு பகுதியான ஒரு தங்க லாக்கெட், அவரிடமிருந்து மீட்கப்பட்டது.
அவா் அளித்த தகவலின் அடிப்படையில், அதே நாளில் டி பிளாக்கில் நடந்த மற்றொரு சோதனையில் அவரது கூட்டாளியும் கைது செய்யப்பட்டாா். மீதமுள்ள நகைகளை மீட்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.