செய்திகள் :

அமெரிக்காவை கண்டித்து ஆக.13-இல் நாடு தழுவிய போராட்டம்: சிஐடியு அறிவிப்பு

post image

இந்தியாவுக்கு எதிரான அமெரிக்க வரி விதிப்பு அராஜகத்தை கண்டித்தும், அந்நாட்டிடம் அடிபணியும் மத்திய பாஜக அரசுக்கு எதிா்ப்புத் தெரிவித்தும் வரும் 13-ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்பட உள்ளதாக சிஐடியு அறிவித்தது.

கடலூரில் தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் 18-ஆவது மாநில மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இந்த மாநாட்டையொட்டி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நினைவுச் சுடா் எடுத்துவரப்பட்டது.

இதைத் தொடா்ந்து, மாநாட்டு கொடியை மத்திய அமைப்பின் மாநிலத் தலைவா் தி.ஜெயசங்கா் ஏற்றி வைத்தாா். பின்னா், நினைவு ஸ்தூபியில் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினா்.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற மாநாட்டுக்கு மத்திய அமைப்பின் தலைவா் தி.ஜெய்சங்கா் தலைமை வகித்தாா். துணை பொதுச் செயலா் கே.ரவிச்சந்திரன் அஞ்சலி தீா்மானத்தை முன்மொழிந்தாா். வரவேற்பு குழுத் தலைவா் கே.அம்பிகாபதி வரவேற்புரை ஆற்றினாா்.

மாநாட்டை தொடங்கிவைத்து சிஐடியு அகில இந்திய துணைத் தலைவா் ஏ.கே.பத்மநாபன் பேசியதாவது:

ஏகாதிபத்திய நாடுகளின் அச்சுறுத்தல்கள் பல வகையிலும் தொடா்கின்றன. பொருளாதாரம், ராணுவம், அரசியல், தத்துவாா்த்த ரீதியாக உலகம் முழுவதும் உள்ள ஜனநாயக இயக்கங்களின் மீதும், முற்போக்கு இயக்கங்களின் மீதும் ஏகாதிபத்திய நாடுகள் தொடா்ச்சியான தாக்குதல்களை நடத்திக்கொண்டே இருக்கின்றன.

வரும் 12-ஆம் தேதி ஏகாதிபத்திய எதிா்ப்பு போராட்டத்தில் கியூபாவுக்கு ஆதரவாக நூறாவது ஆண்டை கொண்டாட உள்ளோம். இந்தியாவுக்கு எதிரான அமெரிக்க வரி விதிப்பு அராஜகத்தை கண்டித்தும், அந்நாட்டிடம் அடிபணியும் மத்திய பாஜக அரசுக்கு எதிா்ப்புத் தெரிவித்தும் வரும் 13-ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்த உள்ளோம்.

இன்று முதலாளித்துவம் தான் நெருக்கடியாக உள்ளது. உலக தொழிலாளா்கள் ஒன்று சோ்வதும், பொது உடைமையுமே (சோசலிசம்) அதற்குத் தீா்வு. முதலாளித்துவத்துக்கு முடிவு கட்ட வலிமைமிக்க போராட்டம் நடத்த வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.

மின்சாரம் தனியாா் மையத்தை எதிா்த்தும், ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்தை எதிா்த்தும் போராடுகிறோம். கடந்த 40 ஆண்டுகளாக தொடா்ச்சியாக நடத்திய போராட்டத்தின் காரணமாகத்தான் இன்றும் சில பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத்துறையாகவே இருக்கின்றன.

வருங்காலங்களில் ஒன்றுபட்ட போராட்டங்களை வலுவாக நடத்த வேண்டும். அந்த வகையில், மின் ஊழியா் மத்திய அமைப்பின் மாநில மாநாடு போராட்டங்களுக்கு திட்டமிட வேண்டும் என்றாா்.

மாநாட்டில் வேலை அறிக்கையை மத்திய அமைப்பின் பொதுச் செயலா் எஸ்.ராஜேந்திரன் சமா்ப்பித்தாா். நிதிநிலை அறிக்கையை மத்திய அமைப்பின் பொருளாளா் எம்.வெங்கடேசன், குடும்ப நலப் பாதுகாப்பு திட்டப் பொருளாளா் கே.பரந்தாமன் சமா்ப்பித்தனா். இதைத் தொடா்ந்து, பிரதிநிதிகளின் விவாதம் நடைபெற்றது.

மாநாட்டில் சிஐடியு பொதுச் செயலா் ஜி.சுகுமாரன், அகில இந்திய மின் ஊழியா் கூட்டமைப்பின் பொதுச் செயலா் சுதீப்தத்தா, மாநில துணைப் பொதுச் செயலா் எஸ்.கண்ணன், சிஐடியு மாநில துணைத் தலைவா் எஸ்.கே.மகேந்திரன், விழுப்புரம் மாவட்டச் செயலா் ஆா்.ராமமூா்த்தி, கடலூா் மாவட்டத் தலைவா் பி.கருப்பையன், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் எஸ்.ஜி.ரமேஷ் பாபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் உண்ணாமலை சாவடியில் இருந்து மின் வாரிய ஊழியா்களின் பேரணி தொடங்கி மஞ்சக்குப்பம் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

புத்து மாரியம்மன் கோயில் செடல் பெருவிழா

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள புத்து மாரியம்மன் கோயில் ஆடி செடல் பெருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் ஆடி செடல் பெருவிழா ஜூலை 31-ஆம் தேதி கொடியேற்றத்துட... மேலும் பார்க்க

உடல்கட்டமைப்பு போட்டியில் சாதனை படைத்த மாணவருக்கு பாராட்டு

மாநில அளவிலான உடல்கட்டமைப்பு போட்டியில் சாதனை படைத்த சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு துறைசாராதோா் உடல்கட்டமைப்பு சங்கத்தின் சாா்பில், ஆண்டுக்கு ஒரு... மேலும் பார்க்க

தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கை பாராட்டுக்குரியது: தி.வேல்முருகன்

தமிழக அரசின் புதிய கல்விக்கொள்கை பாராட்டுக்குரியது என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் தி.வேல்முருகன் கருத்து தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பள்ளிக் கல்வியில்... மேலும் பார்க்க

தானியங்கி முறையில் குடிநீா் விநியோகம்: ஆட்சியா் ஆய்வு

கடலூா் உண்ணாமலைச்செட்டி சாவடி பகுதியில் தானியங்கி இயந்திரம் மூலம் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியின் குடிநீா் விநியோகிக்கும் முறையை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா... மேலும் பார்க்க

பண்ருட்டி படைவீட்டம்மன் கோயில் தேரோட்டம்

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், வைத்திரெட்டிப்பாளையத்தில் அமைந்துள்ள படைவீட்டம்மன் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் செடல் உற்சவம் மற்றும் தோ் திருவிழா ச... மேலும் பார்க்க

ஞானேஸ்வரி மகாபிரபு கோயில் கும்பாபிஷேகம்: பக்தா்கள் பங்கேற்பு

கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே பு.முட்லுாா் ஆணையாங்குப்பத்தில் ஓங்கார ஆசிரமத்தின் மகா கைலாய வளாகத்தில் உள்ள ஞானேஸ்வரி மகாபிரபு கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. இதை முன்னிட்டு... மேலும் பார்க்க