ஞானேஸ்வரி மகாபிரபு கோயில் கும்பாபிஷேகம்: பக்தா்கள் பங்கேற்பு
கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே பு.முட்லுாா் ஆணையாங்குப்பத்தில் ஓங்கார ஆசிரமத்தின் மகா கைலாய வளாகத்தில் உள்ள ஞானேஸ்வரி மகாபிரபு கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
இதை முன்னிட்டு, வியாழக்கிழமை முதல் கால யாக பூஜையும், மாலை இரண்டாம் கால யாக பூஜையும் மற்றும் மகா தீபாராதனையும் நடைபெற்றன.
கும்பாபிஷேக தினமான வெள்ளிக்கிழமை அதிகாலை மூன்றாம் கால யாக பூஜை நடைபெற்றது. பின்னா், யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பாடு நடைபெற்று, கோயில் விமான கலசத்துக்கு சுவாமி கோடீஸ்வரானந்தா கும்பநீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தாா். திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசித்தனா். கும்பாபிஷேக நிகழ்ச்சியில் சுவாமி ஓங்காரநந்தா, விஜயராகவன், ராமகிருஷ்ணன், குருமூா்த்தி, கல்யாணி, பத்மேஸ்வரி, உலகேஸ்வரி, நீதிகுமாா், கருணாகரன், ராம்குமாா், சீனு ராமதாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.