India - Russia: "இந்த ஆண்டு இறுதியில் இந்தியா வருவார் ரஷ்ய அதிபர் புதின்"- பிரதம...
வருமான வரி மசோதா: மக்களவையிலிருந்து திரும்பப் பெற்றார் நிர்மலா சீதாராமன்
புது தில்லி: புதிய வருமான வரி மசோதா 2025-ஐ மக்களவையிலிருந்து திரும்பப் பெற்றிருக்கும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் தாக்கல் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
புதிய வருமான வரி மசோதா குறித்து, தேர்வுக் குழு அளித்த பரிந்துரைகளை மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதன்படி, தேர்வுக் குழு பரிந்துரைத்த பெரும்பாலான மாற்றங்கள், புதிய வருமான வரி மசோதாவில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் என்று அதிகாரிகள் வட்டாரத்தில் சொல்லப்பட்டதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட புதிய வருமான வரி மசோதா, ஆகஸ்ட் 11ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.