Crying Club: `மனம் விட்டு அழுதால், மன அமைதி கிடைக்கும்!' - இந்தியாவில் பிரபலமடைய...
28 ஆண்டுகள் கழித்து மீண்டும் திரையில் டிஸ்கோ சாந்தி!
நடிகை டிஸ்கோ சாந்தி, சுமார் 28 ஆண்டுகளுக்குப் பிறகு ”புல்லட்” திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்குத் திரும்பியுள்ளார்.
தமிழ் திரையுலகில், 1980 மற்றும் 90 காலங்களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர், நடிகை டிஸ்கோ சாந்தி ஸ்ரீஹரி. கடந்த 1998 ஆம் ஆண்டுக்கு பின் திரைப்படங்களில் நடிப்பதை விட்டு விலகி இருந்த அவர், நடிகர் ராகவா லாரன்ஸின் புதிய திரைப்படமான “புல்லட்”-ல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இயக்குநர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில், ராகவா லாரன்ஸ், அவரது தம்பி எல்வின் ஆகியோர் நடிக்கும், புல்லட் திரைப்படத்தின் டீசரை நடிகர் விஷால் இன்று (ஆக.8) வெளியிட்டார்.
நடிகர் ராகவா லாரன்ஸ், போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள இந்தப் புதிய படத்தில், குறி சொல்லும் பெண்ணாக நடிகை டிஸ்கோ சாந்தி நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் மூலம் சுமார் 28 ஆண்டுகள் கழித்து நடிகை டிஸ்கோ சாந்தி திரையில் தோன்றவுள்ளது அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இதையும் படிக்க: தம்பி எல்வினுடன் ராகவா லாரன்ஸ்... புல்லட் டீசர்!