எதிர்நீச்சல் - 2 தொடருக்கு பெருகும் வரவேற்பு! டிஆர்பியில் அசத்தல்!
எதிர்நீச்சல் தொடருக்கான டிஆர்பி, கடந்த வாரங்களைவிட, இந்த வாரம் அதிக புள்ளிகளைப் பெற்று, புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு எதிர்நீச்சல் -2 தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடர் இந்த வாரம் முதல் திங்கள் - வெள்ளி வரை மட்டுமே ஒளிபரப்பாகவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொடரில் பார்வதி, கனிகா, ஹரிப்பிரியா, பிரியதர்ஷினி ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். முதல் பாகத்தில் இருந்த நடிகர்கள் பலரும் இந்த பாகத்திலும் தொடர்கின்றனர்.
எதிர்நீச்சல் தொடரின் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பு இரண்டாம் பாகத்திற்கு கிடைக்கவில்லை என பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது படிப்படியாக அதிக டிஆர்பி புள்ளிகளைப் பெற்று முதல் 5 இடங்களைப் பிடித்து வருகிறது.
திருப்புமுனைகளுடன் கூடிய விறுவிறுப்புக் காட்சிகள் ஒளிபரப்பு செய்யபட்டதால், இந்த வாரம் வெளியான டிஆர்பியில் எதிர்நீச்சல் தொடருக்கு அதிக புள்ளிகள் கிடைத்துள்ளன.
சென்ற வாரம் எதிர்நீச்சல் தொடரின் டிஆர்பி 8.90 புள்ளிகளாக இருந்த நிலையில், இந்த வாரம் 9.02 புள்ளிகளைப் பெற்று புதிய உச்சத்தைப் பதிவு செய்துள்ளது.
கடந்த வாரங்களைபோல, சிங்கப் பெண்ணே, மூன்று முடிச்சு, கயல் தொடர்களே முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளன.
இதையும் படிக்க: வெளியானது சைத்ரா ரெட்டியின் புதிய இணையத் தொடர்!