செய்திகள் :

வடமேற்கு சீனாவில் திடீர் வெள்ளம்! 10 பேர் பலி.. 33 பேர் மாயம்!

post image

சீனாவின் வடமேற்கு மாகாணமான கன்சூவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால், 10-க்கும் மேற்பட்டோர் பலியானதுடன், 33 பேர் மாயமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்சூ மாகாணத்தின், யூஸாங் மாவட்டத்தில், நேற்று (ஆக.7) முதல் தொடர் கனமழை பெய்து வருகின்றது. இதனால், அங்குள்ள லான்ஸோ நகரத்தின் அருகிலுள்ள மலைப் பகுதியில் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அப்பகுதியில் வசித்த சுமார் 10 பேர் பலியானதாகக் கூறப்படும் நிலையில், 33 பேர் மாயமாகியுள்ளனர். இதையடுத்து, மாயமானவர்களை மீட்கும் பணிகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனைத் தொடர்ந்து, கனமழையால், ஸிங்லாங் மலைப் பகுதியில், மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளன.

இதனால், 4 கிராமங்களைச் சேர்ந்த 4,000-க்கும் அதிகமான மக்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பருவமழை தொடங்கியது முதல் சீனாவின் பல்வேறு மாகாணங்களின் பகுதிகள் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ராணுவத்தால் காஸாவை கட்டுப்படுத்த இஸ்ரேல் திட்டம்! ஐ.நா. எதிர்ப்பு!

Flash floods in China's northwestern province of Gansu have killed more than 10 people and left 33 missing.

காஸாவில் பயன்படுத்தக் கூடிய ராணுவ ஏற்றுமதிகளுக்குத் தடை! ஜெர்மனி அரசு அறிவிப்பு!

காஸாவில் பயன்படுத்தக் கூடிய ராணுவ தளவாடங்களின் ஏற்றுமதிகளுக்கு, ஜெர்மனி பிரதமர் ஃப்ரைட்ரிச் மெர்ஸ் தடை விதித்துள்ளார். காஸா மீதான தங்களது ராணுவ நடவடிக்கைகளை அதிகப்படுத்துவதற்கு நேற்று (ஆக.7) இஸ்ரேலிய ... மேலும் பார்க்க

ராணுவத்தால் காஸாவை கட்டுப்படுத்த இஸ்ரேல் திட்டம்! ஐ.நா. எதிர்ப்பு!

காஸா பகுதியை, ராணுவ ரீதியாக முழுவதுமாக ஆக்கிரமிக்கும் திட்டத்தை இஸ்ரேல் அரசு உடனடியாகக் கைவிடவேண்டும் என, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் வோல்கர் டுர்க் வலியுறுத்தியுள்ளார். காஸா பகுதியினுள் செய... மேலும் பார்க்க

அமெரிக்கர்களால் அதிகம் வெறுக்கப்படும் நபர் டிரம்ப் அல்ல; இவர்தான்..!

அமெரிக்கர்களால் மிகவும் வெறுக்கப்படும் நபர்கள் குறித்து கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.கேலப் (Gallup) என்ற கருத்துக்கணிப்பு நிறுவனம், அமெரிக்கர்களால் வெறுக்கப்படும் மற்றும் விரும்பப்படும் நபர்கள் குறி... மேலும் பார்க்க

வரிவிதிப்பு சர்ச்சை: இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தையை நிராகரித்த டிரம்ப்!

வரிவிதிப்பு தொடர்பான சர்ச்சை தீர்க்கப்படும் வரை இந்தியாவுடன் எவ்வித வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தப்படாது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத... மேலும் பார்க்க

மியான்மா் இடைக்கால அதிபா் மரணம்

நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த மியான்மா் இடைக்கால அதிபா் மியின்ட் ஸ்வோ (74) வியாழக்கிழமை மரணமடைந்தாா். தலைநகா் நேபிடாவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அவா் உயிரிழந்ததாக ராணுவம் தெரிவித்தது. மக்களால் த... மேலும் பார்க்க

காஸா பட்டினிச் சாவு 197-ஆக உயா்வு

காஸாவில் இஸ்ரேலின் முற்றுகை காரணமாக பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 197-ஆக உயா்ந்துள்ளது. இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்... மேலும் பார்க்க