செய்திகள் :

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்தார் அன்புமணி! காணொலியில் ராமதாஸ்!!

post image

பாமக பொதுக்குழுக் கூட்டத்துக்கு எதிரான வழக்கில், தலைவர் அன்புமணி சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நேரில் வந்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ், காணொலி வாயிலாக நீதிபதியிடம் பேசுவதற்கு தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்புமணி தலைமையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் பாமக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுமா? தடை விதிக்கப்படுமா? என்பது குறித்து இன்னும் சற்று நேரத்தில் தெரிய வரும் என்பதால், பாமகவினர் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாளை சனிக்கிழமை (ஆக. 9ஆம் தேதி) பாமக பொதுக்குழுவுக்கு அன்புமணி அழைப்பு விடுத்திருப்பதை எதிர்த்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இருவரும் இன்று மாலை 5.30 மணிக்கு வழக்குரைஞர்கள் இன்றி தன்னுடைய நீதிபதி அறைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

நீதிபதியின் அழைப்பை ஏற்று, அன்புமணி சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நேரில் வந்து நீதிபதி அறையில் அமர்ந்திருக்கிறார். தன்னுடைய உடல்நிலையைக் காரணம் காட்டி, பாமக நிறுவனர் ராமதாஸ், நீதிமன்றத்துக்கு வர முடியாது என கடிதம் அனுப்பப்பட்டது. இதையடுத்து, காணொலி வாயிலாக ஆஜராக ஒப்புக் கொணடார் ராமதாஸ்.

இருவரிடமும் சமரசம் பேச நீதிபதி முயற்சி எடுத்திருக்கும் நிலையில், காணொலி வாயிலாக பேசும் வசதி உள்ள அறையில் நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், அன்புமணியிடம் நேரிலும் ராமதாஸிடம் காணொலியிலும் பேசவிருக்கிறார்.

இதையடுத்தே, நாளை அன்புமணி அழைப்பு விடுத்த பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுமா என்பது தெரிய வரும்.

பாமகவில் நிறுவனர் மற்றும் தலைவர் இடையே மோதல் ஏற்பட்டிருக்கும் நிலையில், பாமக பொதுக் குழு ஆக. 9ஆம் தேதி அன்புமணி தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, பாமக நிறுவனா் ராமதாஸ் நியமித்துள்ள மாநில பொதுச் செயலாளா் முரளி சங்கா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, ராமதாஸ் - அன்புமணி இருவரும் நீதிபதி அறைக்கு நேரில் வர அழைப்பு விடுத்திருக்கிறார் நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ்.

நீதிக்கும், அறத்திற்கும் கிடைத்த வெற்றி: பொதுக்குழு தீர்ப்பு குறித்து அன்புமணி

நீதிக்கும், அறத்திற்கும் கிடைத்த வெற்றி என்று பொதுக்குழு தீர்ப்பு குறித்து அன்புமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை காலை 11.00 மணிக்கு நடைப... மேலும் பார்க்க

அன்புமணி நடத்தும் பொதுக்குழுவுக்கு தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்

அன்புமணி நடத்தும் பொதுக்குழுவுக்கு தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டிருக்கும் நிலையில், பாமக பொ... மேலும் பார்க்க

அஜித்குமார் குடும்பத்திற்கு நிவாரண நிதி !

மடப்புரம் கோயில் காவலாளி குடும்பத்துக்கு ரூ. 25 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் பெரியகருப்பன் வெள்ளிக்கிழமை வழங்கினார். ஏற்கெனவே மாநில எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் சார்பில் ரூ.7.5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

வறுமை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு உள்ளது: முதல்வர் ஸ்டாலின்

வறுமை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சென்னை கம்பன் கழகத்தின் பொலிவுமிகு பொன்விழா நிறைவு விழாவில் அவர் ஆற்றிய உரையில், இந்த... மேலும் பார்க்க

அன்புமணி - ராமதாஸ் தரப்பு விசாரணை நிறைவு

சென்னை உயர் நீதிமன்றத்தில் பாமக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை நிறைவடைந்தது. நேரில் ஆஜரான அன்புமணியிடம் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடைபெற்றது. காணொளி வாயிலாக ஆஜரான ராமதாஸ் தரப்பு விளக்கத்தையும் ... மேலும் பார்க்க

சின்னசேலம் ரயில்வே கேட் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதல்: 3 இளைஞர்கள் பலி

சின்னசேலம் ரயில்வே கேட் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற 3 இளைஞர்கள் மீது சரக்கு ஏற்றிச் செல்லும் வேன் மோதியதில் மூவரும் நிகழ்விடத்திலேயே பலியாகினர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்குள்பட... மேலும் பார்க்க