கனரக வாகன ஓட்டுநர்கள் கவனத்திற்கு; நெரிசலை தவிர்க்க தாம்பரத்தில் போக்குவரத்து மா...
அன்புமணி - ராமதாஸ் தரப்பு விசாரணை நிறைவு
சென்னை உயர் நீதிமன்றத்தில் பாமக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை நிறைவடைந்தது.
நேரில் ஆஜரான அன்புமணியிடம் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடைபெற்றது. காணொளி வாயிலாக ஆஜரான ராமதாஸ் தரப்பு விளக்கத்தையும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேட்டறிந்தார். நீதிபதியின் அறையில் விசாரணை முடிந்து உயர் நீதிமன்றத்திலிருந்து அன்புமணி புறப்பட்டு சென்றார்.
விசாரணை நிறைவடைந்ததால் அன்புமணி தலைமையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் பாமக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுமா? தடை விதிக்கப்படுமா? என்பது குறித்து இன்னும் சற்று நேரத்தில் தெரிய வரும் என்பதால், பாமகவினர் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
28 ஆண்டுகள் கழித்து மீண்டும் திரையில் டிஸ்கோ சாந்தி!
பாமகவில் நிறுவனர் மற்றும் தலைவர் இடையே மோதல் ஏற்பட்டிருக்கும் நிலையில், பாமக பொதுக் குழு ஆக. 9ஆம் தேதி(சனிக்கிழமை) அன்புமணி தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து, பாமக நிறுவனா் ராமதாஸ் நியமித்துள்ள மாநில பொதுச் செயலாளா் முரளி சங்கா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இருவரும் இன்று மாலை 5.30 மணிக்கு வழக்குரைஞர்கள் இன்றி தன்னுடைய நீதிபதி அறைக்கு வருமாறு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.