காலிஸ்தான் குடியரசு? கனடாவில் திறக்கப்பட்ட தூதரகத்தால் பரபரப்பு!
சின்னசேலம் ரயில்வே கேட் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதல்: 3 இளைஞர்கள் பலி
சின்னசேலம் ரயில்வே கேட் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற 3 இளைஞர்கள் மீது சரக்கு ஏற்றிச் செல்லும் வேன் மோதியதில் மூவரும் நிகழ்விடத்திலேயே பலியாகினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட பாண்டியங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு மகன் தினேஷ்குமார் (25). இவரது மனைவி கீர்த்தனா (23) தம்பதிகளுக்கு கடந்த இரண்டு மாதம் முன்பாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.
கீர்த்தனா அவரது பெற்றோர் ஊரான சின்னசேலம் அடுத்த மரவாநத்தம் கிராமத்தில் உள்ளார்.
திணேஷ்குமார் குழந்தையை பார்ப்பதற்காக அதே ஊரைச் சேர்ந்த அவரது நண்பர்களான அய்யம்பெருமாள் மகன் வெங்கடேசன் (23), பழனிசாமி மகன் சிவசக்தி (36) உள்ளிட்டோர்களுடன் மரவாநத்தம் கிராமத்திற்கு சென்று குழந்தையை பார்த்துவிட்டு அவரது ஊரான பாண்டியங்குப்பம் கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தனர்.
இருசக்கர வாகனத்தை தினேஷ்குமார் ஓட்டிச் சென்றுள்ளார்.
வியாழக்கிழமை இரவு சின்னசேலம் ரயில்வேகேட் அருகே சென்று கொண்டிருந்த போது எதிர் திசையில் வந்த சரக்கு ஏற்றிச் செல்லும் வேன் மோதியதில் மூன்று இளைஞர்களும் தூக்கி வீசப்பட்டனராம். தூக்கி வீசியதில் மூன்று இளைஞர்களும் நிகழ்விடத்திலேயே பலியாகினர்.
தூத்துக்குடி பிரச்னைகளை பிரதமரிடம் விவரித்த கனிமொழி எம்.பி.
தகவலறிந்து சின்னசேலம் போலீஸார் நிகழ்விடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து சரக்கு ஏற்றிச் செல்லும் வாகன ஓட்டுநரை தேடி வருகின்றனர்.