செய்திகள் :

குஜராத்: சமையலளரின் பேத்திக்கு தனது சொத்தை உயில் எழுதிக்கொடுத்த முதியவர் - ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!

post image

குஜராத் மாநிலத்தில் குஸ்தாத் என்பவர் தான் இறப்பதற்கு முன்பு தனது வீட்டில் சமையலாளராக பணியாற்றிய பெண்ணின் பேத்தியான அமிஷாவுக்கு தனது வீட்டை வழங்குவதாக உயில் எழுதி கொடுத்துள்ளார்.

முன்னாள் டாடா இண்டஸ்ட்ரீஸ் ஊழியரான குஸ்தாத், 2014 ஜனவரி 12ஆம் தேதி அன்று மரணமடைந்திருக்கிறார். இறப்பதற்கு ஒரு மாதம் முன்பு தனது பங்காளவை, வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் பேத்திக்கு உயில் எழுதி கொடுத்துள்ளார். குஸ்தாத் மனைவி 2001 இல் காலமாகி இருக்கிறார்.

அவருக்கு மகன், மகள்கள் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. அமிஷா அப்போது 13 வயது சிறுமியாக இருந்துள்ளார் பாட்டியுடன் சேர்ந்து அவரும் அந்த வீட்டிற்கு அடிக்கடி வந்துள்ளார்.

இதனால் அவர்களுக்கு அமிஷா மீது ஒரு பிணைப்பு உருவாகி இருக்கிறது. அமிஷாவின் கல்வி செலவை அவரே ஏற்று தனது குழந்தையைப் போலவே அவர் கருதி இருக்கிறார்.

அமிஷா கடந்த 2023 ஆம் ஆண்டு அந்த உயில் குறித்து நீதிமன்றத்தில் உரிமை கோரி இருக்கிறார். உயிலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க பொது அறிவிப்பும் விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. குஸ்தாத் சகோதரரும் அமிஷாவுக்கு ஆதரவாக இருந்திருக்கிறார்.

இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் இரண்டாம் தேதி நீதிமன்றம் உயிருக்கு அனுமதி வழங்கி அமிஷாவுக்கு வாரிசு சான்றிதழை வழங்கி இருக்கிறது.

தற்போது தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் அமிஷா இது குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா வலைதளத்தில் தெரிவித்து இருக்கின்றார்.

அதன்படி" அவரை நான் தாய் என்றே அழைப்பேன், அவர் என்னை கவனித்துக் கொள்ள விரும்பினார். எனக்கு அப்பாவாகவும், அம்மாவாகவும் இருந்தார். 13 வயது வரை அவர் எனக்கு பாதுகாப்பு கவசமாக இருந்தார். அவர் என்னை தத்தெடுக்க விரும்பினார்.

ஆனால் எனது நலன் கருதி கொண்டு அதை செய்யவில்லை காரணம் தத்தெடுத்த பின்பு எனது உயிரியல் பெற்றோரிடமிருந்து விலக்கி விடக்கூடாது என்பதற்காக அவர் அதனை செய்யவில்லை. இரு குடும்பத்தினர்களிடமிருந்து எனக்கு அன்பு கிடைக்க வேண்டும் என்று அவர் எப்போதும் விரும்பினார்” என்று குஸ்தாத் குறித்து அமிஷா நினைவு கூர்ந்து இருக்கிறார்.

’பிரான்ஸை விட இந்தியாவில் தான் பாதுகாப்பாக...’ கவனம் பெற்ற பிரெஞ்சு பெண்ணின் வீடியோ - பின்னணி என்ன?

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் ஆசிரியையாக பணிபுரியும் பிரெஞ்சு பெண் ஒருவர், இந்தியாவில் வாழ்வது குறித்த தனது அனுபவங்களை பகிர்ந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.நைஜீரிய யூடியூபரான பாஸ்கல் ஒலால... மேலும் பார்க்க

Instagram: இன்ஸ்டகிராம் அறிமுகப்படுத்திய 3 புதிய அம்சங்கள்; என்னென்ன தெரியுமா?

பிரபல சமூக வலைதளமான மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராமை கோடிக்கணக்கானப் பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மற்ற சமூக வலைதளங்களைவிட இன்ஸ்டகிராமிற்கு பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் புது பு... மேலும் பார்க்க

பீகார்: `அமெரிக்க அதிபர் ட்ரம்ப்' பெயரில் குடியிருப்பு சான்றிதழ் விண்ணப்பித்த ஆசாமி

பீகார் மாநிலத்தில் போலி குடியிருப்பு சான்றிதழ் வழக்கு அதிகரித்து வரும் நிலையில், சமஸ்திபூர் மாவட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பெயரில் விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்... மேலும் பார்க்க

Alert: 'உஷார்' - `டயர் பஞ்சர் பார்க்கும்போது இப்படியும் ஏமாத்துவாங்களா?' - எச்சரித்த அனுபவசாலி!

ஹரியானா மாநிலம் குருகிராமைச் சேர்ந்தவர் பிரனய் கபூர். இவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்று வைரலாகியிருக்கிறது. சாதாரண ஒரு பஞ்சர் மூலம் தான் ஏமாற்றப்பட்டது தொடர்பான எச்சரிக... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: திருமணத்தில் மணமகள் மது அருந்துவது ஒரு சடங்கு! சுவாரஸ்ய பின்னணி என்ன?

ராஜஸ்தானில் பண்டைய பழக்க வழக்கங்களைப் பின்பற்றும் கலாசாரத்தின் ஒரு பகுதியாக மணமக்கள் வீட்டார் மது அருந்துவதை ஒரு வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். படிக்கும்போது ஆச்சரியமாக உள்ளது அல்லவா? திருமண விழாக்கள்... மேலும் பார்க்க

Elon Musk: தனது 3 வயது மகனின் ஓவியத்தை அனிமேஷனாக பகிர்ந்த எலான் மஸ்க் - எப்படித் தெரியுமா?

எலான் மஸ்க்கின் நான்கு குழந்தைகளுக்கு தாயான ஷிவோன் ஜிலிஸ், தனது மூன்று வயது மகன் வரைந்த ஓவியத்தை க்ரோக் இமேஜின் (Grok Imagine) கருவியை பயன்படுத்தி ஒரு குறுகிய அனிமேஷன் வீடியோவாக மாற்றியுள்ளார். ஸ்ட்ரை... மேலும் பார்க்க