Instagram: இன்ஸ்டகிராம் அறிமுகப்படுத்திய 3 புதிய அம்சங்கள்; என்னென்ன தெரியுமா?
பிரபல சமூக வலைதளமான மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராமை கோடிக்கணக்கானப் பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
மற்ற சமூக வலைதளங்களைவிட இன்ஸ்டகிராமிற்கு பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் புது புது அப்டேட்டுகளை அந்த நிறுவனம் வழங்கிக்கொண்டு வருகிறது.

அந்தவகையில் தற்போது மூன்று புதிய அம்சங்களை இன்ஸ்டாகிராம் அறுமுகப்படுத்தி இருக்கிறது. அதாவது Repost, Instagram map, Friends tab என்ற அம்சங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
எக்ஸ் தளத்தில் பதிவுகளை ரீ-ட்வீட் செய்து கொள்வது போல தற்போது இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தி உள்ள Repost ஆப்ஷன் மூலம் ரீல்ஸ் மற்றும் போஸ்ட்டுகளை ரீபோஸ்ட் செய்துகொள்ளலாம்.
தவிர Instagram map மூலம் நண்பர்களிடம் லொக்கேஷன் ஷேர் செய்வதன் மூலம் கூகுள் மேப்பை போல இன்ஸ்டகிராமில் உங்களின் லொக்கேஷனை அறிய முடியும்.

Friends tab ஆப்சனைப் பயன்படுத்தி உங்கள் நண்பர்கள் பதிவிட்ட போஸ்ட் மற்றும் ரீல்ஸ்களை மட்டும் தனியாக பார்க்க முடியும். இந்த அம்சங்களைப் பெற இன்ஸ்டகிராமை அப்டேட் செய்யுங்கள்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...