"வாக்குச்சாவடி வீடியோக்களை ஏன் அழிக்கிறீர்கள்?" - தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் கா...
ராணுவத்தால் காஸாவை கட்டுப்படுத்த இஸ்ரேல் திட்டம்! ஐ.நா. எதிர்ப்பு!
காஸா பகுதியை, ராணுவ ரீதியாக முழுவதுமாக ஆக்கிரமிக்கும் திட்டத்தை இஸ்ரேல் அரசு உடனடியாகக் கைவிடவேண்டும் என, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் வோல்கர் டுர்க் வலியுறுத்தியுள்ளார்.
காஸா பகுதியினுள் செயல்பட்டு வரும், பாலஸ்தீன கிளர்ச்சியாளர்களான ஹமாஸ் படையைத் தோற்கடிக்க, இஸ்ரேல் ராணுவம், போர் தாக்குதல்கள் இல்லாத பகுதிகளில் மக்களுக்குத் தேவையான நிவாரணப் பொருள்களை வழங்கியபடி, காஸாவை முழுவதுமாகத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்போவதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்திருந்தார்.
இதற்கு பல்வேறு, நாடுகளும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், இந்தத் திட்டம் உடனடியாகக் கைவிடப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் வோல்கர் டுர்க் கூறியதாவது:
“இஸ்ரேலின் இந்தத் திட்டமானது, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானது. ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட இருநாட்டு தீர்வுகளின் படி இஸ்ரேல் உடனடியாக அதன் ஆக்கிரமிப்புகளைக் கைவிடவேண்டும். இது பாலஸ்தீனர்களின் உரிமைகளுக்கு எதிரானது” என அவர் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, காஸாவினுள் தடையின்றி நிவாரணப் பொருள்கள் நுழைவதற்கு இஸ்ரேல் அனுமதிக்க வேண்டுமெனவும், பாலஸ்தீன போராளிக் குழுக்கள் எந்தவொரு நிபந்தனையுமின்றி பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேபோல், இஸ்ரேலும் தங்களது கட்டுப்பாட்டிலுள்ள பாலஸ்தீனர்களை விடுவிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: அமெரிக்கர்களால் அதிகம் வெறுக்கப்படும் நபர் டிரம்ப் அல்ல; இவர்தான்..!