செய்திகள் :

வறுமையும் ஆஞ்சநேயரும்... திரையரங்குகளில் வெளியானது நாகேஷ் பேரனின் வானரன்!

post image

நடிகர் நாகேஷின் பேரனான பிஜேஷ் நாகேஷ் நடித்துள்ள வானரன் திரைப்படம் இன்றுமுதல் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

தமிழ்த் திரையுலகில் மிக முக்கியமான கலைஞர்களில் மறைந்த நடிகர் நாகேஷும் ஒருவராக அறியப்படுகிறார். இவரது பேரன் பிஜேஷ் நாகேஷ் வானரன் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் ஆஞ்சநேயர் வேடமிட்டு வீதி வீதியாகச் சென்று காணிக்கை பெற்று வாழ்க்கையை நடத்துபவராக இருக்கிறார்.

இந்தப் படத்தில் வறுமையுடன் தன் மகளுக்காக நடக்கும் உணர்வுப் பூர்வமான காட்சிகளில் பிஜேஷ் நடிப்பு பாராட்டப்பட்டு வருகிறது.

ஆரஞ்சு பிக்சர்ஸ் தயாரிப்பில் ஸ்ரீராம் பத்மநாபன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இதில் அக்‌ஷயா, லொல்லுசபா நடிகர்கள் பலர் நடித்துள்ளனர்.

இந்தப்பட பாடல்கள் சமீபத்தில் வெளியானது. இதில் பாடலாசிரியர் செந்தமிழ் எழுதியுள்ள “நீதானே என் உலகம் ” என்ற அப்பா மகள் பாச உறவு குறித்தான பாடல் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

“இறைவனின் நகலாக கிடைச்சவளே இலையுதிர் காலத்திலே முளைச்சவளே, சாபத்தை வரமாக்க பிறந்தவளே” என்ற உருக்கமான வரிகள் அனைவரையும் கவர்ந்துள்ளது.

இப்படத்தின் முழுப்பாடல்களையும் செந்தமிழ் சீனிவாசன் எழுத, இசையமைபாளர் ஷாஜகான் இசையமைத்துள்ளார் .இந்தப் படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றுவருகிறது.

கூலி டிக்கெட்டை வாங்க குவிந்த கேரள ரசிகர்கள்... 1 மணி நேரத்தில் ரூ.1 கோடி வசூல்!

கூலி படத்தின் கேரள முன்பதிவு ஒரு மணி நேரத்தில் ரூ.1 கோடியை வசூலித்து அசத்தியுள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி திரைப்படம் வருகிற ஆக. 14 ஆம் தேதி திரையரங்களில் வெளியாகவுள்ளது.பான் இந்திய பிர... மேலும் பார்க்க

வரலட்சுமி நோன்பு: நெல்லையப்பர் கோவிலில் 1,008 பெண்கள் பங்கேற்ற சுமங்கலி பூஜை!

நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள நெல்லையப்பர் கோவிலில் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் 1008 பெண்கள் பங்கேற்ற சுமங்கலி பூஜை நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்த... மேலும் பார்க்க

பாடகி என்றால் இப்படி உடை அணியக்கூடாதா? ஜொனிடா காந்தி ஆவேசம்!

பாடகி ஜொனிடா காந்தி பெண்களின் ஆடை சுதந்திரம் குறித்து சமூக வலைதளத்தில் விமர்சிப்பவர்களுக்கு பதிலளித்துள்ளார். பஞ்சாபி குடும்பத்தில் பிறந்த ஜொனிடா காந்தி (35) தில்லியைச் சேர்ந்தவர். கனடாவில் படித்த இவர... மேலும் பார்க்க

எதிர்நீச்சல் - 2 தொடருக்கு பெருகும் வரவேற்பு! டிஆர்பியில் அசத்தல்!

எதிர்நீச்சல் தொடருக்கான டிஆர்பி, கடந்த வாரங்களைவிட, இந்த வாரம் அதிக புள்ளிகளைப் பெற்று, புதிய உச்சத்தை தொட்டுள்ளது.சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு எதிர்நீச்சல் -2 த... மேலும் பார்க்க

வெளியானது சைத்ரா ரெட்டியின் புதிய இணையத் தொடர்!

சைத்ரா ரெட்டி நடிக்கும் புதிய இணையத் தொடரின் முதல் 4 எபிசோடுகள் வெளியாகியுள்ளன.நடிகை சைத்ரா ரெட்டி சரிகம நிறுவனம் தயாரிக்கும் புதிய இணையத் தொடரில் பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார். இத்தொடரில் குரு லட்... மேலும் பார்க்க

அனுஷ்காவின் காதி தமிழ் டிரைலர்!

நடிகை அனுஷ்கா நடிப்பில் உருவான காதி படத்தின் தமிழ் டிரைலர் வெளியாகியுள்ளது.இயக்குநர் கிரிஷ் ஜெகர்லமுடி இயக்கத்தில் நடிகை அனுஷ்கா ‘காதி’ (ghaati) என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் விக... மேலும் பார்க்க