செய்திகள் :

Abhimanyu Easwaran: மறுக்கப்படும் வாய்ப்பு; வாக்குறுதி கொடுத்த கம்பீர்; அபிமன்யு தந்தை சொல்வது என்ன?

post image

இங்கிலாந்து  நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியில் அபிமன்யு ஈஸ்வரன் இடம் பிடித்திருந்தார். ஆனால் அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. 

காயங்கள் மற்றும் வீரர்களின் தேர்வு மாற்றங்களால் கடைசி டெஸ்டிலாவது வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுவும் நடக்காதது அவருக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

அபிமன்யு ஈஸ்வரன்
அபிமன்யு ஈஸ்வரன்

உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்திருக்கும் அபிமன்யுவிற்கு இந்திய அணியில் விளையாடுவது நீண்ட கால கனவாகவே இருக்கிறது.

உள்ளூர் போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி நீண்ட காலமாகத் தனது வாய்ப்புக்காகக் காத்திருக்கும் ஒரு சிறந்த வீரரான அபிமன்யு ஈஸ்வரனுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களிலும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இதுதொடர்பாக, ஊடகவியலாளர் விக்கி லல்வானியின் யூட்யூப் சானலுக்குப் பேட்டியளித்திருக்கும் அபிமன்யு ஈஸ்வரனின் தந்தை ரங்கநாதன் பரமேஸ்வரன், "இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு கிடைக்காததால் அபிமன்யு மிகவும் வருத்தமடைந்தார்.

'அப்பா, எனக்கு இன்னும் இடம் கிடைக்கவில்லை' என்று என்னிடம் போனில் வருத்தப்பட்டார். கம்பீர் என் மகனிடம், 'நீ சரியான பாதையில்தான் பயணிக்கிறாய்.

கம்பீர்
கம்பீர்

உனக்கான வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும். அதுவும் நீண்டகால வாய்ப்பாக இருக்கும். ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் மட்டும் வாய்ப்பு வழங்கி விட்டு அவரை புறக்கணிக்கப் போவதில்லை.

அவர் உழைப்பிற்கான பலன் நிச்சயம் அவருக்குக் கிடைக்கும்' எனக் கம்பீர் உறுதி அளித்தார்” என அவரது தந்தை தெரிவித்திருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Eng vs Ind: `எங்களுக்கு இடையே ட்ரம்ப் பேச்சு வார்த்தை நடத்தவில்லை' - வைரலாகும் வாசிம் ஜாஃபரின் பதிவு

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்ததைத் தொடர்ந்து, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர் பதிவிட்டிருக்கும் பதிவு இணையத்தில் வைரலாக... மேலும் பார்க்க

``இந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக்கொள்வேன்'' - கல்லூரி செல்ல முடியாமல் தவித்த மாணவி; உதவிய பண்ட்

கர்நாடகாவில் நிதி நெருக்கடியால் உயர் கல்விக்கு செல்ல முடியாமல் தவித்து வந்த மாணவிக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் நிதி உதவி வழங்கி இருக்கிறார். கர்நாடகாவின் பகல்கோட் மாவட்டத்தில் ஜோதிகா என்ற ம... மேலும் பார்க்க

ENG vs IND: 'அன்றைக்கு ரொனால்டோவின் படத்தை வால்பேப்பராக வைத்திருந்தேன்' - வெற்றி குறித்து சிராஜ்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. இந்தத் தொடரை இந்தியா சமன் செய்ய முக்கியக் காரணமாக இருந்தவர் முகமது சிராஜ். கடைசி ந... மேலும் பார்க்க

Siraj: ``இந்தத் தொடரை நான் மிகவும் உயர்வாக மதிப்பிடுவேன்'' - நெகிழும் சிராஜ்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. இந்தத் தொடரை இந்தியா சமன் செய்ய முக்கியக் காரணமாக இருந்தவர் முகமது சிராஜ். கடைசி ந... மேலும் பார்க்க

`ஆட்டோக்கார தந்தையின் வானளாவிய கனவு; நிஜமாக்கிக் காட்டிய சிராஜ்!' - இங்கிலாந்தில் எப்படி சாதித்தார்?

'இந்தியா வெற்றி!'இந்திய அணி ஓவலில் ஒரு சரித்திர வெற்றியைப் பெற்றிருக்கிறது. நிஜமாகவே சரித்திர வெற்றிதான். ஏனெனில், இந்தத் தொடருக்கு முன்பாக சீனியர்கள் கூட்டாக ஓய்வு பெற்றனர். புதிய கேப்டனோடு இளம் வீரர... மேலும் பார்க்க

Siraj: வெற்றிக்குப் பின் கோலியிடமிருந்து வந்த ஸ்பெஷல் நோட்; நெகிழ்ந்த சிராஜ்; வைரலாகும் ட்வீட்ஸ்!

இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் நடைபெற்ற (ஜூலை 31 - ஆகஸ்ட் 4) டெஸ்ட் போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றிருக்கிறது.போட்டியின் கடைசி நாளான இன்று கையில் 4 விக்கெட்டுகளுடன் 35 ரன்கள் அடித்தால் வெற்றி ... மேலும் பார்க்க