செய்திகள் :

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சதம் விளாசிய டெவான் கான்வே; வலுவான நிலையில் நியூசி.!

post image

ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வே சதம் விளாசி அசத்தியுள்ளார்.

நியூசிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் நேற்று (ஆகஸ்ட் 7) தொடங்கியது.

இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 125 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, நியூசிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

டெவான் கான்வே சதம்; வலுவான நிலையில் நியூசிலாந்து!

முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்திருந்தது. டெவான் கான்வே 79 ரன்களுடனும், ஜேக்கோப் டஃபி 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 8) இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஜேக்கோப் டஃபி 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து, டெவான் கான்வேவுடன் ஹென்றி நிக்கோல்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த இணை அபாரமாக விளையாடி ரன்கள் குவித்து வருகிறது.

களமிறங்கியது முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெவான் கான்வே இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் முதல் முறையாக சதம் விளாசி அசத்தினார். அவர் கடைசியாக கடந்த 2023 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியிருந்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ஹென்றி நிக்கோல்ஸ் அரைசதம் கடந்து விளையாடி வருகிறார்.

சிறப்பாக விளையாடிய டெவான் கான்வே 245 பந்துகளில் 153 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 18 பவுண்டரிகள் அடங்கும்.

கைவசம் 7 விக்கெட்டுகள் மீதமிருக்க, நியூசிலாந்து அணி ஜிம்பாப்வேவைக் காட்டிலும் 200 ரன்களுக்கும் அதிகமாக முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஆஷஸ் தொடரில் இங்கிலாந்துக்கு கடும் சவால் காத்திருக்கிறது: கிளன் மெக்ராத்

New Zealand opener Devan Conway impressed with a century in the second Test against Zimbabwe.

தொடர்ச்சியாக ரன்கள் குவித்த ரவீந்திர ஜடேஜாவுக்கு பார்த்திவ் படேல் பாராட்டு!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரவீந்திர ஜடேஜாவை முன்னாள் வீரர் பார்த்திவ் படேல் பாராட்டியுள்ளார்.உலகின் நம்பர்.1 ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா அண்மைய... மேலும் பார்க்க

ஆசியக் கோப்பை: சூர்யகுமார் யாதவ் முறியடிக்க காத்திருக்கும் 3 சாதனைகள்!

ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 3 சாதனைகள் படைக்கவிருக்கிறார்.இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பைத் தொடர் வருகிற செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி ... மேலும் பார்க்க

தொடர்ந்து மறுக்கப்படும் வாய்ப்புகள்..! கம்பீரின் வாக்குறுதி பற்றி அபிமன்யு தந்தை பேட்டி!

இந்திய அணியில் அபிமன்யு ஈஸ்வரனுக்கு விரைவில் இடம் கிடைக்கும் என தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் உறுதியளித்ததாக அவரது தந்தை ரங்கநாதன் ஈஸ்வரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் ... மேலும் பார்க்க

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்துக்கு கடும் சவால் காத்திருக்கிறது: கிளன் மெக்ராத்

ஆஷஸ் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 5-0 என முழுமையாகக் கைப்பற்றும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் கிளன் மெக்ராத் கணித்துள்ளார்.இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 5 போ... மேலும் பார்க்க

ஆஷஸ் தொடரை 5-0 என ஆஸி. வெல்லும்..! மெக்ராத் கணிப்பு!

ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் க்ளென் மெக்ராத் ஆஷஸ் தொடரில் நாங்கள் 5-0 என வெல்வோம் எனக் கூறியுள்ளார். இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் ஆஷஸ் என அழைக்கப்படுகிறது... மேலும் பார்க்க

சிஎஸ்கே-விலிருந்து விலகுகிறாரா ரவிச்சந்திரன் அஸ்வின்?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் விலகவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடப்பு ஐபிஎல் தொடரில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவி... மேலும் பார்க்க