செய்திகள் :

சிஎஸ்கே-விலிருந்து விலகுகிறாரா ரவிச்சந்திரன் அஸ்வின்?

post image

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் விலகவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடப்பு ஐபிஎல் தொடரில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.9.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருந்தது.

டிஎன்பிஎல் தொடரில் பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கிலும் கலக்கியிருந்த அஸ்வினுக்கு 3-வது வரிசையில் பேட்டிங் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதனை ரவிச்சந்திரன் அஸ்வின் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. மேலும், அவரது பந்து வீச்சும் சுமாராகவே அமைந்தது. 9 போட்டிகளில் விளையாடிய அஸ்வின் 283 ரன்களும், 7 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருந்தார்.

சரியாக சோபிக்காத உள்ளூர் வீரரான அஸ்வின் மீது விரக்தியடைந்த ரசிகர்கள் பலரும் அவர் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர்.

இந்த நிலையில், அடுத்தாண்டு நடைபெறும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக, தன்னை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விடுவிடுக்க கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

முன்னதாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடிவந்த அஸ்வின், பின்னர் மெகா ஏலத்தில் சென்னை அணியில் இடம்பிடித்தார்.

இதேபோல், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கேப்டன் சஞ்சு சாம்சனும் அவரது அணியில் இருந்து விடுவிடுக்க கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அவரை சென்னை அணிக்கு மாற்றிக்கொண்டு அவருக்குப் பதிலாக அஸ்வின் மற்றும் சாம் கரனை ராஜஸ்தான் அணியில் ஒப்பந்தம் செய்துகொள்ளவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இருப்பினும், இரு அணித் தரப்பிலும் இதுவரை எந்த அதிகாரபூர்வத் தகவலும் வெளியாகவில்லை.

Ashwin has requested the management to release him in the auctions

இதையும் படிக்க : ஆஸ்திரேலிய யு-19 அணியில் இந்திய வம்சாவளி வீரர்கள்!

தொடர்ந்து மறுக்கப்படும் வாய்ப்புகள்..! கம்பீரின் வாக்குறுதி பற்றி அபிமன்யு தந்தை பேட்டி!

இந்திய அணியில் அபிமன்யு ஈஸ்வரனுக்கு விரைவில் இடம் கிடைக்கும் என தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் உறுதியளித்ததாக அவரது தந்தை ரங்கநாதன் ஈஸ்வரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் ... மேலும் பார்க்க

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்துக்கு கடும் சவால் காத்திருக்கிறது: கிளன் மெக்ராத்

ஆஷஸ் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 5-0 என முழுமையாகக் கைப்பற்றும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் கிளன் மெக்ராத் கணித்துள்ளார்.இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 5 போ... மேலும் பார்க்க

ஆஷஸ் தொடரை 5-0 என ஆஸி. வெல்லும்..! மெக்ராத் கணிப்பு!

ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் க்ளென் மெக்ராத் ஆஷஸ் தொடரில் நாங்கள் 5-0 என வெல்வோம் எனக் கூறியுள்ளார். இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் ஆஷஸ் என அழைக்கப்படுகிறது... மேலும் பார்க்க

ஆஸ்திரேலிய யு-19 அணியில் இந்திய வம்சாவளி வீரர்கள்!

ஆஸ்திரேலிய 19 வயதுக்குள்பட்டோருக்கான அணியில் இந்திய வம்சாவளி வீரர்கள் இருவர் இடம்பிடித்துள்ளனர்.ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இந்திய இளம் அணி 3 ஒருநாள் மற்றும் இரண்டு 4 நாள்கள் கொண... மேலும் பார்க்க

டெவான் கான்வே, வில் யங் அரைசதம்: வலுவான நிலையில் நியூசிலாந்து!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது.நியூசிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண... மேலும் பார்க்க

வெற்றிக்கு 100 ரன்கள் தேவை என்றாலும் பேட்டிங்குக்கு வந்திருப்பேன்: கிறிஸ் வோக்ஸ்

ஓவல் டெஸ்ட்டில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 100 ரன்கள் தேவை என்றாலும் பேட்டிங் செய்ய வந்திருப்பேன் என கிறிஸ் வோக்ஸ் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்... மேலும் பார்க்க