தமிழ்நாடு உள்பட 11 மாநிலங்களில் 224 ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பாதிப்புகள்: மத்திய...
ஆஸ்திரேலிய யு-19 அணியில் இந்திய வம்சாவளி வீரர்கள்!
ஆஸ்திரேலிய 19 வயதுக்குள்பட்டோருக்கான அணியில் இந்திய வம்சாவளி வீரர்கள் இருவர் இடம்பிடித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இந்திய இளம் அணி 3 ஒருநாள் மற்றும் இரண்டு 4 நாள்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இந்தத் தொடர் வருகிற செப்டம்பர் 21 ஆம் தேதி தொடங்குகிறது.
இந்தத் தொடருக்கான இந்திய இளம் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆர்யன் ஷர்மா மற்றும் ஆயுஷ் தேஷ்முக் இருவரும் இடம்பிடித்து ஆச்சரியப்படுத்தியுள்ளனர்.
ஆர்யன் ஷர்மா விக்டோரியா அணிக்காக அதிரடி பேட்டராக விளையாடி வருகிறார். அதேவேளையில், நியூ சௌத் வேல்ஸ் அணியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 5 பேரில் ஆயுஷ் தேஷ்முக்கும் இடம்பெற்றுள்ளார்.
ஒருநாள் தொடர் செப்டம்பர் 21, 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பிரிஸ்பேனில் உள்ள இயன் ஹீலி ஓவலில் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 3 வரை பிரிஸ்பேனிலும், அக்டோபர் 7 முதல் 10 வரை மெக்கேயிலும் இரண்டு 4 நாள் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
ஆஸ்திரேலிய 19 வயதுக்குள்பட்டோருக்கான அணி விவரம்
சைமன் பட்ஜ், அலெக்ஸ் டர்னர், ஸ்டீவ் ஹோகன், வில் மலாஜுக், யஷ் தேஷ்முக், டாம் ஹோகன், ஆர்யன் ஷர்மா, ஜான் ஜேம்ஸ், ஹைடன் ஷில்லர், சார்லஸ் லச்முந்த், பென் கோர்டன், வில்லியம் பைரன், கேஸி பார்டன், அலெக்ஸ் லீ யங், ஜேடன் ட்ராபர்.