தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கையை ஸ்டாலின் வெளியிட்டார் | செய்திகள்: சில வரிகளி...
கஃபேக்களில் மட்டும் கிடைக்கும் வைஃபை - மொபைல் இணைய வசதியில்லாத நாடு பற்றி தெரியுமா?
இன்றைய டிஜிட்டல் உலகில், இணையம் இல்லாமல் ஒரு நாளைக் கழிப்பது பலருக்கு கற்பனை செய்ய முடியாத ஒன்றாக உள்ளது. ஆனால் இந்த மொபைல் இணைய வசதி, சமூக ஊடகங்கள் மற்றும் ஏடிஎம் வசதிகள் இல்லாத ஒரு விசித்திரமான நாடு இந்த பூமியில் இன்னும் இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? எங்கே இருக்கிறது அந்த நாடு என்று விரிவாக தெரிந்துக்கொள்ளலாம்.
கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள எரித்திரியா என்ற நாட்டில், தான் மொபைல் இணைய சேவை வசதிகள் இல்லை. எரித்திரியா கிட்டதட்ட உலகின் மிக ரகசியமான நாடாகவே உள்ளது.

சர்வாதிகார ஆட்சி காரணமாக, குடிமக்கள் கட்டாய இராணுவ சேவையை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் எரித்திரியா பெரும்பாலும் "ஆப்பிரிக்காவின் வடகொரியா" என்று அழைக்கப்படுகிறது.
மொபைல் இணைய வசதி இல்லாத ஒரே நாடு
எரித்திரியாவில் மொபைல் டேட்டா சேவை இல்லை, மக்கள் வீடுகளில் இணையத்தைப் பயன்படுத்த வழியில்லை. நாடு முழுவதும் பரவலாக உள்ள சில கஃபேக்களில் மட்டுமே இணைய பயன்பாடு கட்டுப்படுத்தப்பட்டு காணப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த கஃபேக்களில் மக்கள் தங்கள் மொபைல் சாதனங்களைப் பயன்படுத்தி வை-ஃபை மூலம் இணையத்தை அணுகுகின்றனர்.
அதிலும் ஒரு மணி நேர வை-ஃபை வசதிக்கு சுமார் 100 எரித்திரிய நக்ஃபா (இந்திய மதிப்பில் 100 ரூபாய்) செலவாகுமாம். அதிலும் இணைய சேவை அங்கு மெதுவாகதான் இருக்கும் என்பதால் அதன் பயன்பாடும் குறைவாகவே உள்ளது.