செய்திகள் :

விமானப் பயணத்தில் செல்போனை Airplane Modeல் வைப்பது ஏன் அவசியம்? விமானியின் விளக்கம்

post image

விமானப் பயணத்தின்போது செல்போன்களை ஏரோபிளேன் மோடில் வைப்பது மிகவும் முக்கியமானது என ஒரு விமானி தெளிவாக விளக்கியுள்ளார். விமானி ஒருவர் டிக்டாக்கில் இதுகுறித்து பதிவு செய்திருக்கிறார்.

சொல்போனை ஏரோபிளேன் மோடில் வைக்க வேண்டும் என்பது மிக அவசியமான ஒன்று தான், பயணிகளின் பாதுகாப்பிற்கு இது அவசியமானது என்று கூறியுள்ளார். சமீபத்தில் விமானத் துறையில் ஏற்பட்ட இயக்க மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களுக்கு மத்தியில், இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

செல்போனை ஏரோபிளேன் மோடில் வைக்காவிட்டால் என்ன நடக்கும்?

செல்போனை ஏரோபிளேன் மோடில் வைக்காவிட்டால், அது விமானத்தின் தகவல் தொடர்பு அமைப்புகளில் தலையீடு செய்யக்கூடும் என்று அமெரிக்காவின் பெடரல் விமானப் போக்குவரத்து நிர்வாகம் (FAA) மற்றும் விமான நிறுவனங்கள் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்துள்ளன.

இதனால், விமானத்தில் பாதுகாப்பு அபாயங்கள் ஏற்படலாம், விமானங்கள் தாமதமாகலாம் அல்லது ரத்து செய்யப்படலாம்.

விமானி ஒருவர் இதைப் பற்றி விளக்குகையில், "செல்போன்கள் ஏரோபிளேன் மோடில் இல்லாவிட்டால், விமானம் வானில் இருந்து விழாது, விமானத்தின் அமைப்புகளை நேரடியாகப் பாதிக்காது, ஆனால், இது விமானிகள் பயன்படுத்தும் ஹெட்செட்களில் தொந்தரவை ஏற்படுத்தும்.

ஒரு விமானத்தில் 70, 80 அல்லது 150 பயணிகள் இருக்கும்போது, மூன்று அல்லது நான்கு பேரின் செல்போன்கள் கூட ரேடியோ டவருடன் இணைப்பை ஏற்படுத்த முயற்சித்தால், அது ரேடியோ அலைகளை உருவாக்குகிறது. இந்த ரேடியோ அலைகள், விமானிகள் பயன்படுத்தும் ஹெட்செட்களில் தலையீடு செய்யலாம்" என்று கூறியிருக்கிறார்.

தனது அனுபவம் குறித்து பகிர்ந்து அந்த விமானி, விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க முயற்சிக்கும்போது, ஹெட்செட்டில் "கொசு ஒலி" போன்ற எதோ எரிச்சலூட்டும் ஒலி கேட்டதாக அவர் கூறினார். இதனால் தான் செல்போனை ஏரோபிளேன் மோடில் அவசியம் என்று விவரித்திருக்கிறார்.

பயணிகளுக்கும் சிரமம்

ஏரோபிளேன் மோடில் வைக்காவிட்டால், செல்போன் தொடர்ந்து செல்லுலார் சிக்னல்களைத் தேடுவதால், அதன் பேட்டரி வேகமாக தீர்ந்துவிடும். இது பயணிகளுக்கு கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தலாம் என்று கூறுகிறார்.

செல்போன் தலையீடு காரணமாக விமான விபத்துகள் நிகழ்ந்ததாக இதுவரை எந்தப் பதிவுகளும் இல்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஏரோபிளேன் மோடில் வைப்பது பாதுகாப்பிற்கு உகந்ததாகக் கருதப்படுகிறது.

எல்லோர் மனதிலும் பரவச அலைகளை ஏற்படுத்திய சதாபிஷேக கல்யாணம்! | #ஆஹாகல்யாணம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர்: பிரமாண்ட தூண், கம்பீரமாக காட்சியளிக்கும் திருமலை நாயக்கர் அரண்மனை.. |Photo Album

ஸ்ரீவில்லிபுத்தூர் திருமலை நாயக்கர் அரண்மனைஸ்ரீவில்லிபுத்தூர் திருமலை நாயக்கர் அரண்மனை மேலும் பார்க்க

புதுச்சேரி: பிரெஞ்சு ஒற்றுமையை பறைசாற்றும் ராஜா பண்டிகை

வண்ண விளக்குகளை கையிலேந்தி வரும் பிரெஞ்சு மக்கள்வண்ண விளக்குகளை கையிலேந்தி வரும் பிரெஞ்சு மக்கள்வண்ண விளக்குகளை கையிலேந்தி வரும் பிரெஞ்சு மக்கள்வண்ண விளக்குகளை கையிலேந்தி வரும் பிரெஞ்சு மக்கள்வண்ண விள... மேலும் பார்க்க

சென்னை: பட்டுப்புடவை வாங்கினால் தங்கம் இலவசம்; பிரியதர்ஷினி சில்க்ஸ் ஷோரூம் பிரமாண்டமாக திறப்பு

தொழில்துறையில் 30 ஆண்டுகள் அனுபவம் கொண்ட பிரியதர்ஷினி நிறுவனம் சென்னை கே.கே.நகர் பி.வி. ராஜமன்னார் சாலை, ஆர்.டி.ஓ. மைதானம் எதிரில், பிரியதர்ஷினி சில்க்ஸ் என்ற பிரமாண்ட ஷோரூமை திறந்துள்ளது.திறப்பு விழா... மேலும் பார்க்க

34 கோடியில் பிரமாண்ட வீடு; விராட் கோலி - அனுஷ்கா தம்பதியினரின் ’அலிபாக் வில்லா’ பற்றி தெரியுமா?

மும்பைக்கு அருகே உள்ள அலிபாக் இன்று பல பிரபலங்களின் விருப்பமான விடுமுறை இடமாக மாற்றியிருக்கிறது. ஷாருக் கான், தீபிகா படுகோன், ரன்வீர் சிங் உள்ளிட்டோர் அங்கு வீடு வைத்திருக்கின்றனர். அந்த வரிசையில் தற்... மேலும் பார்க்க