"வாக்குச்சாவடி வீடியோக்களை ஏன் அழிக்கிறீர்கள்?" - தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் கா...
10 ச.அடி வீட்டில் 80 வாக்காளர்களா? ராகுல் குற்றச்சாட்டும் சரிபார்ப்பும்!
தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியதுகுறித்து இந்தியா டுடே செய்தி ஊடகம் பெங்களூரில் உண்மை சரிபார்ப்பு நடத்தியது.
பெங்களூரு மத்திய தொகுதியில் வாக்காளர் முறைகேடு நடந்ததாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமையில் குற்றம் சாட்டினார்.
வீடு எண் 35, முனி ரெட்டி தோட்டத்தில் 10 - 15 சதுர அடி அளவிலான இடத்திலேயே 80 வாக்காளர்களின் பெயர்களின் பதிவு செய்யப்பட்டிருப்பதாக ராகுல் கூறினார்.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக பூத் எண்470, மகாதேவபுரா, தகவல் தொழில்நுட்ப வழித்தடத்தில் ஆங்கில செய்தி ஊடகம் சோதனை நடத்தியது.
இதன்போது, மேற்குறிப்பிட்ட முனி ரெட்டி தோட்டத்தில் உணவு டெலிவரி செய்யும் தீபாங்கர் என்பவர் வசித்து வருவது தெரிய வந்தது. இருப்பினும், அவர் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் என்றும், சில மாதங்களுக்கு முன்னதாகத்தான் இங்கு குடிபெயர்ந்ததாகவும் கூறினார்.
அதுமட்டுமின்றி, பெங்களூரு வாக்காளர் பட்டியலில் அவர் பதிவு செய்யவில்லை என்றும், அந்த முகவரியில் குறிப்பிட்டிருக்கும் பிற வாக்காளர்கள் குறித்தும் எதுவும் தெரியவில்லை என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, அவர் வசிக்கும் வீடானது, பாஜகவை சேர்ந்த ஜெயராம் ரெட்டி என்பவருக்கு சொந்தமானது என்று கூறியதால், ஜெயராமிடமும் விசாரிக்கப்பட்டது.
ஆனால், தான் பாஜகவில் கட்சி உறுப்பினர் இல்லை என்று கூறிய ஜெயராம், பாஜக வாக்காளர் என்று தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில், இங்கு தங்கும் நிறைய பேர் வாக்காளர்களாக பதிவு செய்துவிட்டு, பின்னர் இங்கிருந்து சென்று விடுகின்றனர். இருப்பினும், தேர்தல் நேரங்களில் அவர்கள் திரும்பி வந்து விடுகின்றனர். அவர்கள் இங்கில்லை என்றாலும், வாக்காளர் பட்டியலில் இந்த முகவரிதான் இருக்கிறது என்று தெரிவித்தார்.