அமெரிக்கர்களால் அதிகம் வெறுக்கப்படும் நபர் டிரம்ப் அல்ல; இவர்தான்..!
அனுஷ்காவின் காதி தமிழ் டிரைலர்!
நடிகை அனுஷ்கா நடிப்பில் உருவான காதி படத்தின் தமிழ் டிரைலர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் கிரிஷ் ஜெகர்லமுடி இயக்கத்தில் நடிகை அனுஷ்கா ‘காதி’ (ghaati) என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் விக்ரம் பிரபு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஆக்சன் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி கவனம் பெற்றிருந்ததைத் தொடர்ந்து, இப்படம் வருகிற செப்.5 ஆம் தேதி பான் இந்திய வெளியீடாகத் திரைக்கு வரும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
நீண்ட காலம் கழித்து அனுஷ்காவை திரையில் காண, ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இதனால் காதி படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
முன்னதாக, காதி படத்தின் தெலுங்கு மொழி டிரைலர் வெளியான நிலையில், தற்போது தமிழ் மொழி டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இதையும் படிக்க: சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தியவர் கைது